பிரபல தொழிலதிபரும், டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து, தேசிய விருதுபெற்ற இயக்குநர் சுதா கொங்கரா இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது, கதைக்கான ஆராய்ச்சி முக்கியமான கட்டத்தில் உள்ளதாகவும்; அதற்கான தயாரிப்புப்பணிகள் 2023 அக்டோபரில் தொடங்கும் எனவும், இந்தப் படத்தை 'கேஜிஎஃப்' படத்தின் தயாரிப்பாளர்களான ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக சுதா கொங்கரா உண்மைச்சம்பவங்களை அடிப்படையாகக்கொண்ட படத்தை இயக்கப்போவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்தில் நாயகன் யார் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால், சூர்யா அல்லது அபிஷேக் பச்சன் இருவரில் யாரேனும் நடிக்கலாம் எனத்தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுதா கொங்கரா, தற்போது தனது 2020 தமிழ் பிளாக்பஸ்டர் 'சூரரைப் போற்று' படத்தின் ஹிந்தி ரீமேக்கில் பணிபுரிந்து வருகிறார். இந்த ரீமேக்கில் அக்ஷய் குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 68ஆவது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த திரைக்கதை உட்பட ஐந்து விருதுகளை 'சூரரைப் போற்று' பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கைதி ரீமேக்கா இது...?; போலா படத்தின் டீஸர் வெளியீடு