தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

பிறந்தநாளன்று மச்சான்ஸ்-களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நமீதா! - birthday

நடிகை நமீதா இன்று 41வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் தாய்மை எனும் புதிய அத்தியாயத்தை தொடங்கி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நமீதா!
பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நமீதா!

By

Published : May 10, 2022, 1:12 PM IST

Updated : May 10, 2022, 2:20 PM IST

1981ம் ஆண்டு சூரத்தில் பிறந்த நமீதா ஆரம்பத்தில் மாடலிங் துறையில் நுழைந்த அவர் தனது 17வது வயதில் மிஸ் சூரத் பட்டம் பெற்றவர். அதன் பிறகு தமிழ் சினிமாவில் எங்கள் அண்ணா படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றார். அவரது மச்சான்ஸ் என்ற வார்த்தை ரசிகர்கள் மத்தியில் மிகப்பிரபலம்.

அதனைதொடர்ந்து தனது நண்பரும் காதலருமான வீராவை திருமணம் செய்துகொண்ட நமீதா, கடந்த 2019ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். மேலும் மாநில செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார். இந்நிலையில் இன்று (மே 10) 41-வது பிறந்தநாள் கொண்டாடும் நமீதாவுக்கு ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் தான் கர்ப்பமாக இருப்பதாக நமீதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர், தாய்மை எனும் புதிய அத்தியாயத்தை தொடங்கி உள்ளதாக நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். மேலும் கர்ப்பமான வயிற்றுடன் எடுத்த புகைப்படங்களை அவர் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:சாய் பல்லவிக்கு பிறந்தநாள் பரிசளித்த கமல்..!

Last Updated : May 10, 2022, 2:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details