சென்னை:லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த மாதம் 19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியானது. இப்படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், அர்ஜுன், கௌதம் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி 12 நாட்களில் ரூ.540 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று இப்படத்தின் வெற்றி விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. லியோ படததின் இசை வெளியீட்டு விழா நடைபெறாத நிலையில் தற்போது லியோ படத்தின் வெற்றி விழா பிரம்மாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது.இந்த வெற்றி விழாவில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய், த்ரிஷா, மன்சூர் அலிகான், மடோனா செபாஸ்டியன், சாண்டி, மிஷ்கின், கௌதம் மேனன், தயாரிப்பாளர் லலித் குமார், அர்ஜுன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய தினேஷ் மாஸ்டர், "விஜய் நடித்த பல படங்களில் குரூப் டான்சராக பணியாற்றினேன். அதன் பிறகு அவரது நிறைய படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராக பணியாற்றினேன். அப்போது முதல் இப்போது வரை அவர் மாறாமல் அப்படியே தான் இருக்கிறார். விஜய்யின் எந்த பாடலாக இருந்தாலும் ஸ்பெஷல் தான். நான் ரெடி பாடலில் மன்சூர் அலிகானை ஆட வைக்க மிகவும் கஷ்டப்பட்டேன்" என்றார்.
பிறகு பேசிய இயக்குநர் மிஷ்கின், "ஒரு மாதம் முன்பு விமான நிலையத்தில் டாய்லெட்டில் வைத்து என்னிடம் ஒருவன் லியோ அப்டேட் கேட்டார். ப்ரூஸ் லீ, மைக்கேல் ஜாக்சனுக்கு பிறகு நான் கண்ணால் பார்த்த லெஜன்ட் விஜய். என்னுடைய திரை வாழ்வில் முதல் படம் யூத் திரைப்படம் . 23 ஆண்டுகளாக எனது தம்பியை பார்த்துக் கொண்டு இருக்கிறேன். ஒரு துளி கூட மாறாமல் அதே அன்பு அதே புன் சிரிப்பு. நான் இந்த நிகழ்ச்சிக்கு 4 மணிக்கு வந்தேன் விஜய் 2 மணிக்கு வந்துள்ளார்.