தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

Etv Bharat Exclusive : பாடகர் என்பதை தாண்டி நல்ல மனிதர் - எஸ்பிபி குறித்து இசை அமைப்பாளர் கார்த்திக் ராஜா உருக்கம்!

Singer Spb anniversary : எல்லாரும் நன்றாக பாடலாம் ஆனால் எஸ்பிபி ஒரு சிறந்த மனிதர் என்று எஸ்பிபியின் நினைவு நாளில் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா ஈடிவி பாரத் ஊடகத்திற்கு தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

எஸ்பிபி குறித்து இசை அமைப்பாளர் கார்த்திக் ராஜா உருக்கம்
எஸ்பிபி குறித்து இசை அமைப்பாளர் கார்த்திக் ராஜா உருக்கம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 25, 2023, 2:18 PM IST

Updated : Sep 25, 2023, 2:27 PM IST

எஸ்பிபி குறித்து இசை அமைப்பாளர் கார்த்திக் ராஜா உருக்கம்

சென்னை:இந்தியத் திரைதுறையை தனது நவரச குரலால் அரை நூற்றாண்டு காலம் கட்டி ஆண்டவர் எஸ்.பி பாலசுப்பிரமணியம். எத்தனையோ பாடல்களில் நம்மை மயக்கிய இந்த 'பாடும் நிலா' நம்மை விட்டு பிரிந்து இன்றோடு மூன்று ஆண்டுகள் ஆகிறது. கடந்த 2020ம் ஆண்டு ஏற்பட்ட கரோனா பெருந்தொற்று பல்லாயிரக்கணக்கான மக்களுடன் சேர்ந்து நம் எஸ்பிபியையும் கொண்டு சென்றுவிட்டது.

இன்று எஸ்பிபியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம். கலைத்துறையில் கடந்த 1966 முதல் கிட்டத்தட்ட 16 மொழிகளில் தனது ஆளுமையை நிலை நாட்டி வந்தார் எஸ்பிபி . ஆந்திர மாநிலத்தின் நெல்லூரில் பிறந்து வளர்ந்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். அவரின் நினைவு நாளான இன்று திரை பிரபலங்கள் தங்களது நினைவுகளை ஈடிவி பாரத் ஊடகத்திற்குப் பகிர்ந்துள்ளனர்.

எஸ்பிபி குறித்து பாடகர் மனோ நம்மிடம் பேசுகையில், "அந்த மகானை மறக்க முடியாது. அவர் இல்லாத உலகமும் இல்லை, அவர் பாடல்களைக் கேட்காத நாட்களும் இல்லை" என்று உணர்ச்சி பொங்கத் தெரிவித்தார். பாடகர் எஸ்பிபி பிஸியாக இருந்த காலக்கட்டத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவால் அவருக்கு பதிலாக அறிமுகப்படுத்தப்பட்டவர் பாடகர் மனோ என்பது குறிப்பிடத்தக்கது.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் இருவரும் நடுவராக பணியாற்றி இருந்தனர். அப்போது இருவரும் பேசும் விதம், கிண்டல், நகைச்சுவை என இருவரது உறவைக் கண்டு ரசிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். பின்னர், இசை அமைப்பாளர் கார்த்திக் ராஜாவை பேசுகையில், "தமிழ்நாட்டின் சிறந்த பாடகர் எஸ்பிபி. அவரை ரொம்ப மிஸ் செய்கிறோம்.

அவர் இல்லாத இந்த மூன்று ஆண்டுகள் கஷ்டமாகத்தான் உள்ளது. ஒவ்வொரு கச்சேரிக்கும் போகும் போதும் அவரின் நியாபகம் தான்.கச்சேரி என்றாலே எஸ்பிபி தான், மலேசியாவில் எனக்கு கச்சேரியில் பாடினார். அதெல்லாம் ஒரு இன்பமான நிகழ்வாக நினைக்கிறேன். எனது இசையில் நிறையப் பாடல்கள் பாடியுள்ளார்.

'உள்ளம் கொள்ளை போகுதே' படத்திலும் அவர் பாடியுள்ளார். எஸ்பிபி குரல் மிகவும் வித்தியாசமானது, பழைய குரலும் புதிய குரலும் சேர்ந்த கலவை அவருடையது. அவரை மிகவும் மிஸ் செய்கிறோம்.‌ எல்லோருமே நல்லா பாடலாம் ஆனால் எஸ்பிபி பாடகரைத் தாண்டி நல்ல மனிதர். அந்த நல்ல மனிதநேயமிக்க மனிதரை இழந்து விட்டோம்” என்று தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

எஸ்பிபி தனது இளமைக் காலத்தில் இன்ஜினியர் ஆக வேண்டும் என்பதே அவரது அதிகபட்ச கனவாக இருந்தது. ஆனால் விதி வசத்தால் பாடகராக அவதாரம் எடுத்தார். பல்லாயிரக்கணக்கான பாடல்கள் ஏராளமான மொழிகளில் காதல், வீரம், சோகம், மகிழ்ச்சி, ஏக்கம் என அனைத்து உணர்வுகளையும் தனது குரலில் இயல்பாகவே கொண்டவர்.

பாடலுக்கு நடுவே இவர் கொடுக்கும் சிணுங்கல் குரலும், சிரிப்பும் யாருக்குத் தான் மறக்கும். பாடலுக்கு தகுந்தார் போல் ஏற்றி இறக்கி பாடுவதில் வல்லவர். இவரின் மரணம் அனைவரையும் கலங்கடித்தது எனச் சொன்னால் மிகை ஆகாது. தமிழகத்தின் பாடும் நிலா எஸ்பிபி மறைந்தாலும், அவர் பாடிய பாடல்கள் மூலம் அனைவரது நினைவுகளிலும் வலம் வந்து கொண்டே தான் இருக்கிறார்.

இதையும் படிங்க:"இந்த தேகம் மறைந்தாலும்.. இசையாய் மலர்வேன்" - பாடும் நிலா எஸ்பிபி நினைவு தினம்!

Last Updated : Sep 25, 2023, 2:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details