தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

மறுமணம் முடித்த டி.இமான்...! பிரபலங்கள் வாழ்த்து - டி இமான் இரண்டாம் திருமணம்

இசையமைப்பாளர் டி. இமான் மறுமணம் செய்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இவருக்கு திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

d imman second marriage  music composer d imman  music composer d imman second marriage  மறுமணம் முடித்த டி இமான்  டி இமான் இரண்டாம் திருமணம்  இசையமைப்பாளர் டி இமான்
டி.இமான்

By

Published : May 15, 2022, 3:03 PM IST

சென்னை:சின்னத்திரை மூலம் தமிழ் திரை உலகில் தடம் பதித்த இசையமைப்பாளர் டி.இமான், தற்போது வெள்ளித்திரையிலும், கலக்கலான ஹிட்ஸ்களை கொடுத்து வருகிறார். விஜய், அஜித், ரஜினி, சூர்யா உள்ளிட்ட மெகா ஸ்டார்ஸ்களின் பெரிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு இசையமைத்து, தொடர்ந்து கலக்கல் ஹிட்ஸ் கொடுத்து அசத்தி வருகிறார்.

இவர் மோனிகா ரிச்சர்ட் என்பவரை கடந்த 2008இல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் தனது மனைவியை சட்டபூர்வமாக விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், நேற்று (மே 14) தமிழ்த்திரையுலகில் கலை இயக்குநராகப் பணியாற்றி மறைந்த உபால்டுவின் மகள் அமலியை, அவர் மறுமணம் செய்துள்ளார்.

மறுமணத்தின்போது மிகவும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தார்கள். இவர்களது மறுமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இவர்களது மறுமணத்திற்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: வீரம்.. வித்தியாசமான லுக்கில் சல்மான் கான்!

ABOUT THE AUTHOR

...view details