தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'பொன்னியின் செல்வனை எம்ஜிஆர் எங்களுக்காக விட்டுச்சென்றுள்ளார்' - மணிரத்னம்! - பொன்னியின் செல்வன் டீசர்

’பொன்னியின் செல்வன்’ மக்கள் திலகம் எம்ஜிஆர் நடிக்க வேண்டிய படம், நாடோடி மன்னன் படத்திற்கு பிறகு அவர் நடிக்க வேண்டியது. ஆனால், முடியாமல் போனதற்கான காரணம் இன்று புரிந்தது. ஏனென்றால் அதை எங்களுக்காக விட்டு சென்றிருக்கிறார் என இயக்குநர் மணிரத்னம் கூறியுள்ளார்.

பொன்னியின் செல்வனை எம்ஜிஆர் எங்களுக்காக விட்டுச்சென்றுள்ளார்
பொன்னியின் செல்வனை எம்ஜிஆர் எங்களுக்காக விட்டுச்சென்றுள்ளார்

By

Published : Jul 9, 2022, 9:32 AM IST

லைகா புரோடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கிஸ் இணைந்து தயாரித்து, இயக்குனர் மணிரத்னம் இயக்கி, பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த 'பொன்னியின் செல்வன்' படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு அப்படத்தின் குழுவினர் பேசியதாவது:

நடிகர் கார்த்தி பேசும்போது, "நம் பள்ளிப்பருவத்தில் வரலாறு படம் என்றாலே தூங்கிவிடுவோம். வரலாற்றின் மீது ஆர்வம் இருக்காது. அப்படி விழித்திருக்கும் எஞ்சிய நேரத்தில் நாம் கேட்டதெல்லாம் அந்நியர் நம்மை அடிமைபடுத்திய தான். இப்போது இருக்கும் காலகட்டத்தில் புத்தகம் படிப்பதற்கு யாருக்கும் நேரமில்லை. 10 வினாடி வீடியோவைப் பார்த்துவிட்டு நகர்ந்து விடுகிறார்கள்.

ஆனால், 5 பகுதிகளைக் கொண்ட ஒரு புத்தகத்தை மணி சார் படமாக்கியிருக்கிறார். அனைவருக்கும் ஏற்றவாறு மணி சார் இந்த படத்தை மிக அழகாக உருவாக்கி இருக்கிறார். இந்த இளைய தலைமுறையினருக்கு வரலாறு படியுங்கள் என்று சொல்கிறேன். இப்படத்தைப் பார்க்கும்போது பெருமிதம் வரும். அப்படி பெருமிதம் வரும்போது இதைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் வரும். பொன்னியின் செல்வன், மணி சார் நமக்கு அளித்த பரிசு" என்றார்.

நான் எனது அம்மாவிடம், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்திய தேவன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளேன் என்று கூறிய போது. எனது கல்லூரியில் உள்ள பெண்கள் எல்லாம் வந்திய தேவனை போன்ற ஒருவனைத் தான் திருமணம் செய்ய ஆசைப்படுவார்கள் என்று கூறினார். அதன் பிறகு வரலாறு படிக்கும் நண்பனிடம் கேட்டேன், வந்திய தேவனை எப்படி புரிந்து கொள்வது என்று கேட்ட போது, ஐஏஎஸ் அதிகாரி தான் என்று கூறினார்.

அவருக்கென தனி பிரிவு கிடையாது என்று கூறினார். வந்திய தேவன் ஒரு இளவரசன் ஆனால் அவனுக்கு நாடு கிடையாது. ஆனால் அவன் பேராசை கொண்டவன். இது தான் எனக்கு வந்திய தேவனை புரிந்துகொள்ள உதவியாக இருந்தது” என தெரிவித்தார்.

நடிகை த்ரிஷா பேசும்போது, “ரோஜா திரைப்படத்தின் போதே இயக்குநர் மணிரத்னம் பான் இந்தியா படம் என்பதை உருவாக்கிவிட்டார். யார் கேட்டாலும் நான் மணிரத்னம் சாரின் குந்தவை என்று சொல்வேன். தமிழ் மக்களுக்கு பெருமை சேர்க்கும் படம். ராஜ ராஜ சோழன் உலகம் முழுவதும் தமிழை, அதன் பெருமையை கொண்டு சென்றார்” என பெருமிதம் தெரிவித்தார்.

சரத்குமார் பேசும் போது, “இந்த மேடையில் நிற்பது த்ரிஷா கூறியது போல புல்லரிக்கும் கணம் தான். கார்த்தி கூறியது போல சோழர்களைப் பற்றி இன்னும் பேசிக் கொண்டு தான் இருக்கிறார்கள். கடல் பயணம் மேற்கொண்டு சாம்ராஜ்யத்தை விரிவுப்படுத்தியது சோழர்கள். ஆமைகளை பின் தொடர்ந்து அதன்பின் வரும் மின்சாரத்தை வைத்து தான் சோழர்கள் ஒவ்வொரு தேசத்திற்கும் சென்று சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தினார்கள்.

எத்தனை படங்கள் நடித்திருந்தாலும், மணிரத்னம் படத்தில் நடிப்பது பெருமை. அதிலும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனில் நடித்திருந்தாலே பெருமை தான். அதன்படி பழுவேட்டையராக நடித்திருப்பதில் பெருமையடைகிறேன். வசனங்களை எப்படி பேசவேண்டும் என்று மணி சாரிடம் கேட்டால், நீங்கள் படித்துவிட்டு மட்டும் வாருங்கள். எப்படி நடிக்க வேண்டும் என்று நான் சொல்லித் தருகிறேன் என்று கூறினார்.

இப்படத்தின் அறிவிப்பு வந்தபோதே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ரசிகர்களும் எந்த கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார்கள் என்ற ஆர்வத்துடனும் படத்தின் ரிலீஸ் எப்போது என்ற ஏக்கத்துடனும் இருந்தார்கள். இப்போது அவர்களுக்கான பதில் கிடைத்துவிட்டது என நினைக்கிறேன்” என்றார்.

விக்ரம் பிரபு பேசும்போது, “சிறு வயதில் தாத்தா பொன்னியின் செல்வன் புத்தகத்தை எடுத்து வரச் சொன்னார். அப்போது நான் கொண்டு வந்து கொடுத்தேன். இன்னும் நான்கு பாகம் இருக்கிறது அதையும் எடுத்து வரச் சொன்னார். அப்படிதான் எனக்கு பொன்னியின் செல்வனை தெரியும். இப்போது மணி சார் அழைத்தபோது நெகிழ்ச்சியாக இருந்தது” என்றார்.

ஐஸ்வர்ய லட்சுமி பேசும்போது, “எவ்வளவு நன்றி கூறினாலும் மணி சாருக்கு போதாது. ஒவ்வொரு கதாபாத்திரத்திமும் இயற்கையாக அமைந்திருக்கிறது. இந்த படத்தில் ஒரு பகுதியாக இருப்பதே பெருமை. இதை தவிர பேசுவதற்கு ஒன்றுமில்லை” என்றார்.

ஜெயம் ரவி பேசும்போது, “எங்கள் ஒவ்வொருக்கும் பெருமைதான். இதை உங்களுக்கு வழங்குவதைவிட மகிழ்ச்சியான விடயம் எதுவுமில்லை. ஒருமுறை மணி சாரின் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு தவறிவிட்டது. அதற்காக என்னை திட்டுவதற்காக தான் அழைக்கிறார் என சென்றேன். ஆனால், நீ தான் பொன்னியின் செல்வனாக நடிக்க போகிறாய் என்று கூறினார்.

இந்த மேடையைவிட அவர் கூறிய அந்த தருணம் தான் புல்லரிக்கும் தருணமாக இருந்தது. பல பேரின் கனவு நினைவாகி இருக்கிறது. எங்களுடைய கனவும் நினைவாகியிருக்கிறது. பல லட்சம் பேர் இந்த புத்தகத்தை படித்திருக்கிறார்கள். பல ஆயிரம் பேர் இதைப் பற்றி பேசியிருக்கிறார்கள். ஆனால், இதை ஒரே ஆளாக திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் மணி சார். அவருக்கு தலை வணங்குகிறேன்” என்றார்.

இயக்குநர் மணிரத்னம் பேசும்போது, “நான் கல்லூரி படிக்கும்போது இந்த புத்தகம் படித்தேன். கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், இன்னும் நெஞ்சை விட்ட நீங்கவில்லை. கல்கிக்கு முதல் நன்றி. இப்படம் மக்கள் திலகம் எம்ஜிஆர் நடிக்க வேண்டிய படம். நாடோடி மன்னன் படத்திற்கு பிறகு அவர் நடிக்க வேண்டியது. ஆனால், முடியாமல் போனதற்கான காரணம் இன்று புரிந்தது.

எங்களுக்காக விட்டு சென்றிருக்கிறார். எவ்வளவு பேர் முயற்சித்திருக்கிறார்கள். நானும் 3 முறை 1980களில் இருந்து முயற்சி செய்து இன்று தான் முடித்திருக்கிறேன். இங்கு உள்ளவர்கள் அனைவராலும் தான் இது சாத்தியமானது. இவர்கள் இல்லையென்றால், இது சாத்தியமில்லை. முக்கியமாக ஏ.ஆர். ரஹ்மானுக்கு நன்றி” என்றார்.

இசையாமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பேசும்போது, “30 வருடங்களாக எனக்கு பாஸ் மணிரத்னம் சார் தான். ஒருவரிடம் இருக்கும் திறமையை எப்படி வெளியே எடுப்பது என்பதை நான் மணி சாரிடம் தான் கற்றுக் கொண்டேன். இப்படத்திற்கு இசையமைக்க பல இடங்களுக்குச் சென்று ஆராய்ச்சி செய்தோம். அந்த சமயத்தில் கரோனா ஊரடங்கு வந்துவிட்டது. அந்த காலத்திலும் அனைவரும் தங்களின் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றியிருக்கிறார்கள். ஆகவே, இது நம் எல்லோருடைய படம் என்று கூற வேண்டும்” என்றார்.

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் பேசும்போது, “இப்பட வாய்ப்பு கிடைத்தது என்னுடைய பாக்கியம். மணி சாரைப் பற்றி நிறைய கூறலாம். அவர் சிறந்த நண்பர், ஆசிரியர், வழிகாட்டி என்று சொல்லிக் கொண்டே போகலாம். இப்பட வாய்ப்பு கிடைத்து சந்தோஷத்துடன் வீட்டிற்கு வந்தேன். வந்ததும் பயம் வந்தது. இப்படம் தமிழின் அடையாளம். தமிழ் இருக்கும் வரை பொன்னியின் செல்வன் அடையாளமாக இருக்கும்” என்றார்.

இதையும் படிங்க: ”ரத்தமும், போர்களமுமாய்” ; ’பொன்னியின் செல்வன்- முதல் பாகம்’ டீசர்

ABOUT THE AUTHOR

...view details