தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

சோனி லிவ்வின் ஒரிஜினல் இணையத் தொடர் 'மீம் பாய்ஸ்' டீஸர் வெளியானது! - சோனி லிவ்

சோனி லிவ் ஓடிடி தளத்தின் ஒரிஜினல் வெப் தொடரான 'மீம் பாய்ஸ்' தொடரின் டீஸர் வெளியாகியுள்ளது.

சோனி லிவ் ஒரிஜினல் இணையத் தொடர் “மீம் பாய்ஸ்’ டீஸர் வெளியானது..!
சோனி லிவ் ஒரிஜினல் இணையத் தொடர் “மீம் பாய்ஸ்’ டீஸர் வெளியானது..!

By

Published : Jun 26, 2022, 9:57 PM IST

சோனிலிவ் தமிழ் ஓடிடி தளங்களில் சிறந்த படைப்புகளைத் தொடர்ந்து வழங்கி வருவதால், மக்கள் மத்தியில் மகத்தான வரவேற்பைப் பெற்றுள்ளது. சோனி லிவ் தளத்தின் அடுத்த ஒரிஜினல் படைப்பாக, பல திறமையான நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் அடங்கிய 'மீம் பாய்ஸ்' தொடர் தற்போது அந்த வரிசையில் இணைந்துள்ளது.

’மீம் பாய்ஸ்’ தொடரின் டீஸர் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நான்கு கல்லூரி மாணவர்கள் ஒரு தனிப்பட்ட மீம் பேஜை நடத்துகிறார்கள். அதில் அவர்களின் ஒடுக்குமுறை மிகுந்த கல்லூரி நிர்வாகத்தை நகைச்சுவையாக காட்ட ஆரம்பிக்க, அது தற்செயலாக கல்லூரி முழுவதும் ஒரு புரட்சியை உருவாக்குகிறது.

ராஜீவ் ராஜாராம், த்ரிஷ்யா கௌதம் ஆகியோரால் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தொடரை, அருண் கௌஷிக் இயக்கியுள்ளார். இந்தத் தொடரில் குரு சோமசுந்தரம், படவா கோபி, ஆதித்ய பாஸ்கர், சித்தார்த் பாபு, ஜெயந்த், நம்ரிதா மற்றும் நிகில் நாயர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Rainshine Studios தயாரிப்பில், ஷோ ரன்னராக கோகுல் கிருஷ்ணா பணியாற்றுகிறார்.

இதையும் படிங்க: உலகத்தமிழர்கள் 'மாமனிதன்' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்டாட வேண்டும் - இயக்குநர் பாரதிராஜா

ABOUT THE AUTHOR

...view details