தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

குறட்டை பிரச்னையை மையமாக வைத்து மணிகண்டன் நடிக்கும் புதிய காமெடி படம்!

குறட்டைப்பிரச்னையை மையமாக வைத்து நடிகர் மற்றும் இயக்குநரான மணிகண்டன் நடிக்கும் பெயரிடப்படாத ஓர் படம் தயாராகி வருகிறது.

By

Published : Nov 2, 2022, 3:51 PM IST

குறட்டை பிரச்சனையை மையமாக வைத்து மணிகண்டன் நடிக்கும் புதிய காமெடி திரைப்படம்..!
குறட்டை பிரச்சனையை மையமாக வைத்து மணிகண்டன் நடிக்கும் புதிய காமெடி திரைப்படம்..!

'விக்ரம் வேதா', 'காலா' , 'சில்லுக்கருப்பட்டி', 'ஜெய் பீம்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்த நடிகர் மணிகண்டன் முதல்முறையாக தனிக் கதாநாயகனாக ஓர் படத்தில் நடித்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்தத்திரைப்படத்தை இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்குகிறார்.

இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்தப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் நசரேத் பசிலியான், யுவராஜ் கணேசன், மகேஷ்ராஜ் பசிலியான் தயாரித்து இருக்கின்றனர். படத்தில் மணிகண்டன் உடன் முக்கியக்கதாபாத்திரங்களில் மீதா ரகுநாத், ரமேஷ் திலக், இயக்குநர் பாலாஜி சக்திவேல், பகவதி பெருமாள் (பக்ஸ்) உள்ளிட்டப் பலர் நடித்திருக்கின்றனர்.

குறட்டை பிரச்னையை மையமாக வைத்து மணிகண்டன் நடிக்கும் புதிய காமெடி படம்

இன்று பெரும்பாலானோர் அவதிப்படும் 'குறட்டை' பிரச்னையை மையமாக வைத்து நகைச்சுவையுடன் இணைந்த ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு திரைப்படமாக இந்தத்திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர். சென்னையைச்சுற்றி, ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கின்றனர். தற்போது இந்தப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

குறட்டை பிரச்னையை மையமாக வைத்து மணிகண்டன் நடிக்கும் புதிய காமெடி படம்

இதையும் படிங்க: இந்தியன் 2 படப்பிடிப்பில் இணைந்த யுவராஜ் சிங்கின் தந்தை

ABOUT THE AUTHOR

...view details