தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

2k கிட்ஸ்களைக் கவர்ந்த லவ் டுடே(Love Today) திரைப்படம்! - லவ் டுடே ரிலீஸ்

இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகி இன்று(அக்.4) வெளியாகியுள்ள ‘லவ் டுடே’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப்பெற்று வருகிறது.

2k கிட்ஸ்களை கவர்ந்த லவ் டுடே திரைப்படம்!
2k கிட்ஸ்களை கவர்ந்த லவ் டுடே திரைப்படம்!

By

Published : Nov 4, 2022, 4:38 PM IST

சென்னை: 2019ஆம் ஆண்டு வெளியான கோமாளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர், பிரதீப் ரங்கநாதன். தனது முதல் திரைப்படத்திலேயே வித்தியாசமான கதை, காமெடி, சென்டிமென்ட், சோசியல் மெஸேஜ் என அனைவரின் கவனத்தையும் தன் மீது திருப்பி இருந்தார். இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், சில விருதுகளையும் பெற்றது.

இவர் தற்போது 'லவ் டுடே' என்ற படத்தை இயக்கி நாயகனாகவும் நடித்துள்ளார். இப்படத்தில் இவானா இவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் நடிகை ராதிகா சரத்குமார், யோகி பாபு, ரவீனா, சத்யராஜ், பரத், கதிர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இத்திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தைப் பார்த்த ரசிகர்கள் மிகவும் நன்றாக உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். கோமாளி படத்தைப்போலவே காமெடியாகவும் சென்டிமென்ட் கலந்தும் இப்படத்தையும் இயக்கியுள்ளார்.

செல்போனால் காதலர்களுக்கு இடையே நடக்கும் ஊடல் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னை ஆகியவற்றை மையப்படுத்தி எந்தவித ஆபாசமும் இல்லாமல் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கும் வகையில், எடுத்துள்ளதாக பதிவிட்டு வருகின்றனர். 2k கிட்ஸ்களுக்கு ஏற்ற படமாக இப்படம் இன்று(அக்.4) வெளியாகி, நல்ல வரவேற்பினைப்பெற்று வருகிறது.

2k கிட்ஸ்களைக் கவர்ந்த லவ் டுடே(Love Today) திரைப்படம்!

இதையும் படிங்க: சல்மான் கான் மனுவில் தீர்ப்பு வழங்க நேரமில்லை - மும்பை உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details