தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

கையெல்லாம் வீங்கிப் போகும் அளவுக்கு பரத் என்னை அடித்தார் - வாணிபோஜன் - நடிகர் பரத்

கணவன் மனைவியை பிசாசு ஆகவும், மனைவி கணவனை பிசாசு ஆகவும் பார்க்கக்கூடியது பற்றிய படம் தானே தவிர பேய்ப்படம் அல்ல என 'லவ்' திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் நடிகர் பரத் பேசியுள்ளார்.

கையெல்லாம் வீங்கிப் போகும் அளவுக்கு பரத் அடித்தார் - வாணிபோஜன்
கையெல்லாம் வீங்கிப் போகும் அளவுக்கு பரத் அடித்தார் - வாணிபோஜன்

By

Published : Dec 7, 2022, 10:41 PM IST

இயக்குநர் RP பாலா இயக்கத்தில் பரத், வாணிபோஜன், விவேக், டேனி ஆகியோர் நடித்துள்ள லவ் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் நேற்று(டிச.6) நடைபெற்றது. அதில் பேசிய நடிகை வாணி போஜன், படத்தில் எங்களுக்கு நிறைய சண்டைக் காட்சிகள் உள்ளன.

ஒவ்வொரு நாள் ஷூட்டிங் முடிந்ததும் காயத்தோடு வீட்டுக்கு செல்லக்கூடிய அளவுக்கு பரத் என்னை அடிப்பார் என வாணி போஜன் சொன்னதும், ”நீங்க அடிச்சதை சொல்லமாட்டீங்களே” என உட்கார்ந்த இடத்திலிருந்தே குரல் கொடுத்தார்.

’ஒரு பக்கத்தை மட்டும் காட்டுனீங்களே இன்னொரு பக்கத்தையும் காட்டுனீங்களா...?’ என விஜயகாந்த் மேடையில் கேட்டதைப் போல, கணவன்கள் மனைவியிடம் அடி வாங்குவதைப் பற்றி பேசாத வாணிபோஜனை கிண்டலடித்து பரத் பேசியதும், வாணிபோஜனே சிரித்துவிட்டார்.

அதன்பின், ஒரிஜினலாக இருக்கவேண்டும் என்பதற்காக உண்மையாகவே அடிக்கவேண்டும் என ஸ்டன்ட் மாஸ்டர் சொன்னார். எனவே, நானும் அவரை அடித்தேன். அதனால் தான் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கின்றன என வாணிபோஜன் பேசினார்.

நடிகர் பரத் மேடையில் பேசிய போது, இந்தப் படத்துக்கு நிறைய நிகழ்ச்சிகள் இருப்பதால் குறைவாகவே பேசுகிறேன் எனக் கூறி படம் பற்றிய மொத்த தகவல்களையும் பேசிவிட்டு, ஐயோ எல்லாத்தையும் பேசிட்டேனே என்றார்.

கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் ஓடும் படமாக இருந்தாலும், திரைக்கதை பலமாக இருந்ததால் அதனை ஒரே அறையில் எடுத்து முடிக்கும் தன்னம்பிக்கை எங்களுக்கு இருந்தது என்றார். சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற கணவன் - மனைவி கொலை சம்பவம் போலவே எங்கள் கதை இருந்தாலும், இந்தப் படத்தை முன்பே நாங்கள் எடுத்துவிட்டதால் தப்பித்தோம், என்றார் நடிகர் டேனி.

இதையும் படிங்க: பாபா ரீ -ரிலீஸ் தேதி அறிவிப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்

ABOUT THE AUTHOR

...view details