சென்னை: கே.ஹெச் (KH)பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ஹரி பாஸ்கர், ஓடிஓ (ODO) பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் நேதாஜி இணைந்து, "அண்ணபூர்ணி" என்ற படத்தை தயாரிக்கின்றனர். லயோனல் ஜோசுவா இயக்கும் இந்தப் படத்தில், லிஜோமோல் ஜோஸ், ஹரி கிருஷ்ணன், லாஸ்லியா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அவர்களுடன் தரணி ரெட்டி, ராஜீவ் காந்தி, வைரபாலன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
லாஸ்லியா- ஹரி கிருஷ்ணன்-லிஜோமோல் ஜோஸ் நடிக்கும் "அண்ணபூர்ணி" - த்ரில்லர் படமாக உருவாகும் அண்ணபூர்ணி
த்ரில்லர் படமாக உருவாகும் "அண்ணபூர்ணி" திரைப்படத்தில் நடிகைகள் லாஸ்லியா, லிஜோமோல், நடிகர் ஹரி கிருஷ்ணன் உள்ளிட்டோர் ஒப்பந்தமாகியுள்ளனர்.
losliya
த்ரில்லர் டிராமாவாக உருவாகும் "அண்ணபூர்ணி" படத்திற்குப் பிரபல இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். பாடலாசிரியர் யுகபாரதி இப்படத்திற்கு வசனங்களும் பாடல்களும் எழுதுகிறார். சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: 'திரை தீப்பிடிக்கும்..!' : 'பீஸ்ட் மோடில்' தளபதி விஜய்