சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கதில் விஜய் நடிப்பில் செவன் ஸ்கீரின் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம், லியோ. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், வெளிநாடுகளில் லியோ திரைப்படத்திற்கான டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கி விற்றுத் தீர்ந்தன.
இதனைத் தொடர்ந்து படத்தின் பாடல்களான "நா ரெடி, badas” ஆகிய இரு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், படத்தின் டிரைலர் இன்று (அக்.5) வெளியாகும் என கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு படத்தின் அப்டேட் உடன் படக்குழு அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில், அனைவரும் ஆர்வமாக எதிர்பார்த்த “லியோ” படத்தின் த்ரிஷா கதாபாத்திரத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டு உள்ளது. அந்த போஸ்டரில், ஆயுதங்களில் ரத்தம் தெறிக்க, த்ரிஷா பயந்த நிலையில் இருக்கும் போஸ்டரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி உள்ளது.
இதையும் படிங்க:லியோவை இணைத்த லோகேஷ் கனகராஜ் - நெட்டிசன்களின் புலம்பல்களுக்கு பதில்!