நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் "பத்தல பத்தல" பாடலில் ஒன்றிய அரசை விமர்சிக்கும் வரிகளை நீக்கக்கோரி ராஜ்கமல் நிறுவனத்திற்கு சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகா் கமல் நடிப்பில் உருவாகியுள்ள ’விக்ரம்’ திரைப்படத்தில் கமல் எழுதி பாடி ஆடியுள்ள ’பத்தல பத்தல’ பாடலின் லிரிக்கல் வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது.
அதில் ’பத்தல பத்தல’ என்ற பாடலில் ஒன்றிய அரசை திருடன் என்றும், கரோனா தடுப்பூசி திட்டத்தை விமர்சித்தும், சாதிய ரீதியாக பிரச்னைகளை தூண்டும் வகையிலும் அமைந்துள்ளதால், அதன் வரிகளை நீக்க வேண்டுமென வலியுறுத்தி சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலரான ஆர்.டி.ஐ. செல்வம் என்பவர் தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.