சென்னை: எந்த இந்திய மொழியிலும் இதுவரை ஆராயப்படாத, தனிப்பகுதியாக விளங்குகிறது, ஆன்மிக சிந்தனை வடிவம். எங்கும் நிறைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணனின் விஸ்வரூபத்தின் பிரமாண்டத்தை குருஷேத்திர யுத்த பூமியில் ஸ்ரீ கிருஷ்ண பெருமான் அர்ஜூனனுக்கு, அளித்த பிரமாண்ட தரிசனத்தின் வடிவாம்சமும், விளக்கமும் ஆகும் இந்த 'விஸ்வரூப தரிசனம்' என்ற 30 நிமிடங்கள் அடங்கிய பாடல் ஆல்பம்.
’எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவருடைய இசைக்கலை பங்களிப்பு மற்றும் புகழ் மிகுந்த இசைப்பயணம் என்னும் மகுடத்தில், விலைமதிப்பிட முடியாத உயர்ந்த வைரக்கல் போன்றது. இந்த பிரமாண்டமான பாடல் 'விஸ்வரூப தரிசனம்' என்னும் இந்தப் பாடலை அமரர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடவேண்டும் என்பது இறைவனின் கட்டளை போலும்!’ என்று இந்தப் பாடலைத் தயாரித்து வழங்கிய பாடகர் ஸ்ரீஹரி கூறுகிறார்.
மேலும், "சிம்போனி நிறுவனத்தின் சார்பில் 500 ஒலி மற்றும் காணொலி ஆல்பங்களை வெளியிட்டுள்ளோம். மார்ச் 2020 கோவிட் நோய் பரவலுக்குப் பிறகு (முதல் அலை) இந்தப் பாடலுக்கான இசை அமைப்பை HMV ரகு சார் மற்றும் பாடல் வரிகளை குருநாத சித்தர், எழுதி முடித்தபின், இந்தப் பாடலை, பக்தி உணர்ச்சிப் பாவங்களை சிறந்த முறையில் வெளிப்படுத்தவல்ல சிறந்தகுரலைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று எண்ணினேன்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் தான் பொருத்தமானவர் என உணர்ந்து முடிவு செய்தேன். இந்தப் பாடலுக்கான பின்னணி இசை தயார் நிலையில் இல்லாதிருந்தும், SPB அவர்கள் குரலில் இந்தப் பாடலை தாமதம் இன்றி உடனே ஒலிப்பதிவு செய்து முடிக்க விரும்பினேன். இந்நிலையில், பெருமதிப்பிற்குரிய 86 வயதான நடமாடும் இசை நூலகம் திரு.K.S.ரகுநாதன் அவர்களிடம் இசை இல்லாமல் SPB அவர்களைப் பாடவைத்துப் பதிவு செய்ததற்கான வலுவான காரணங்களை எதுவும் என்னால் கூற இயலவில்லை.
அவருக்கு என்னை மிகவும் பிடிக்கும் மற்றும் நான் அவருக்க ஒரு செல்லப்பிள்ளை போல் என்பதால், எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடவிருக்கும் பாடலை பின்னணி இசை இல்லாமல் TEMPO CLICK TRACK என்னும் நுணுக்கத்தைப் பயன்படுத்தி ஒலிப்பதிவு செய்ய உற்சாகமாக சம்மதித்தார்.
எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்கள், இந்தப் பாடலின் சிந்தனை வடிவத்தையும், பாடல் வரிகளையும் வெகுவாக ரசித்து மகிழ்ந்தார். இந்நாள் வரை, இத்தகைய சிந்தனை வடிவத்தையும், பாடல் வரிகளையும், இசை அமைப்பையும் எந்த ஒரு இந்திய மொழியிலும் அமைக்க முயற்சித்ததாகத் தெரியவில்லை. இணையற்ற விதத்தில் இந்தப் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடிய விதம், நம்மை உருகவும் நெகிழவும் வைக்கிறது. உலகெங்கிலும் உள்ள SPB அவர்களின் ரசிகர்களுக்கு இந்தப் பாடலை SPB அவர்களின் கடைசிப் பரிசாக அளிக்கிறோம்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: ரஜினிகாந்த் உடன் நடிகர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு!