தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'கூச முனிசாமி வீரப்பன்' ஆவணப்படத்தின் டிரெய்லர் வெளியீடு! - நக்கீரன்

வீரப்பனின் பிரத்யேக நேர்காணல் அடங்கிய வீரப்பனின் 'கூச முனிசாமி வீரப்பன்' என்ற ஆவணப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது

கூச முனிசாமி வீரப்பன்
கூச முனிசாமி வீரப்பன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 24, 2023, 4:37 PM IST

சென்னை: பிரபல ஒடிடி தளமான ZEE5 தனது அடுத்த தமிழ் ஒரிஜினல் சீரிஸான 'கூச முனிசாமி வீரப்பன்' என்ற ஆவணப்படத்தின் டிரெய்லரை இன்று வெளியிட்டுள்ளது. இந்த ஆவணப்படம் இந்திய அளவில் பேசப்பட்ட சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்க்கை மற்றும் அவரது குற்றச்சரித்திரம் பற்றிய நெருக்கமான பார்வையை வழங்குகிறது.

நிஜ வாழ்க்கைக் காட்சிகள், அவருக்கு நெருக்கமான நபர்கள் மற்றும் அவரைப் பிடிக்க முயன்ற அதிகாரிகளின் நேரடி வாக்குமூலங்கள் ஆகியவற்றின் மூலம், இந்த ஆவணப்படம் வீரப்பன் பற்றி எவரும் அறியாத ஆளுமை மற்றும் அவரது குற்றப் பின்னணியைத் தெளிவாகச் சித்தரிக்கிறது.

இந்த ஆவணப்படத்தின் தனிச்சிறப்பு என்னவென்றால், இந்த ஆவணப்படம் வீரப்பனின் வார்த்தைகளில், அவரது முழு வாழ்க்கை கதையையும் விவரிக்கிறது. அது மட்டுமல்லாது அவரைச் சுற்றி நடந்த பல நிகழ்வுகள் பற்றிய அறியப்படாத உண்மைகளை வெளிப்படுத்துகிறது. தமிழ் ஆவணப்படமான ​​'கூச முனிசாமி வீரப்பன்' டிசம்பர் 8 முதல் தமிழ், கன்னடம், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில் ZEE5 இல் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

மூன்று தசாப்தங்களாக தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவின் அடர்ந்த காடுகளை வேட்டையாடிய மிகப் பிரபலமான நபரான வீரப்பன், சிறப்பு அதிரடிப்படையின் (STF) என்கவுண்டரில் உயிரிழந்தார். வரலாறாக மாறிய அவரது வாழ்க்கை கதை காவல்துறை ஆவணங்களின் ஒரு பகுதியாக உள்ளது. வரவிருக்கும் ZEE5 தமிழ் ஆவணப்பட சீரிஸ் ‘கூச முனிசாமி வீரப்பன்’ என்பது வீரப்பனால் அவரது வார்த்தைகளில் அவர் வாழ்வின் மீது ஒரு புதிய கண்ணோட்டத்தை வழங்குகிறது.

இது குறித்து பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கூறுகையில், “வீரப்பனுடனான நேர்காணலைப் பெறுவதற்கு, நாங்கள் பெரும் முயற்சிகளையும், பல இன்னல்களையும் சந்தித்தோம். முதல் முறையாக, இந்த நேர்காணலின் மிக விரிவான பதிப்பு ZEE5 OTT தளத்தில் பார்வையாளர்களுக்கு "கூச முனிசாமி வீரப்பன்" என்ற தலைப்பில் ஆவணக் கதையாக வழங்கப்படவுள்ளது.

வீரப்பனின் கதை நேர்மையுடனும், முழுமையுடனும் பாதிக்கப்பட்டவர்களின் கதைகளை உள்ளடக்கியதாகச் சித்தரிக்கப்பட வேண்டியது அவசியம். இது ஆவணப்படம் மட்டுமல்லாது அனைவரையும் ஈர்க்கக்கூடிய ஆக்‌ஷன் த்ரில்லராக மாறுவதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்டதாகும் என்றார்.

இதையும் படிங்க: சர்ச்சையில் சிக்கிய சீனு ராமசாமி.. பதிலடி கொடுத்த நடிகை மனிஷா யாதவ்!

ABOUT THE AUTHOR

...view details