தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

விதார்த், கலையரசன் நடிக்கும் க்ரைம் த்ரில்லர் படம்! - Teju Ashwini

நடிகர் விதார்த் மற்றும் இளம் நட்சத்திரங்கள் பலர் நடிக்கும் புதிய கிரைம் திரில்லர் படத்தின் படப்பிடிப்பு துவங்கி உள்ளது.

விதார்த்
விதார்த்

By

Published : Jun 30, 2023, 2:43 PM IST

Updated : Jun 30, 2023, 3:45 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் சமீப காலமாக க்ரைம் த்ரில்லர் படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகின்றன. சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற போர் தொழில் படமே அதற்கு சாட்சி. தற்போது நடிகர் விதார்த் நடிக்க ஹைபர் லிங்க் க்ரைம் த்ரில்லர் படமாக புதிய படம் ஒன்று தயாராகி வருகிறது.

இப்படத்தை Trending entertainment & White horse studios K. சசிகுமார் தயாரித்து உள்ளார். அறிமுக இயக்குநர் சகோ. கணேசன் இயக்கத்தில், விதார்த், கலையரசன், சந்தோஷ் பிரதாப் ஆகியோரின் நடிப்பில், ஹைபர் லிங்க் க்ரைம் திரில்லராக உருவாகும் இந்த படத்திற்கு பெயரிடப்படவில்லை. இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே துவங்கியது. பூஜையில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

ஒரு சிறு விஷயம் பல பெரிய மாறுதல்களை உருவாக்கும் எனும் கேயாஸ் விதியின் படி உலகில் பல அற்புதமான திரைக்கதைகள் உருவாகி உள்ளன. அந்த வகையில் ஒரு கொலையில் தொடர்புடைய நான்கு பேரின் சூழலை ஹைபர் லிங்க் ஆக இணைத்து இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: வண்டலூர் பூங்காவில் சிங்கக் குட்டியை 6 மாதத்திற்கு தத்தெடுத்தார் சிவகார்த்திகேயன்!!

மர்டர் மிஸ்டரி கலந்த க்ரைம் திரில்லராக உருவாகும் இப்படத்தில், தமிழின் முன்னணி இளம் நட்சத்திரங்களான விதார்த், கலையரசன், சந்தோஷ் பிரதாப், த்ரிகுண், ஜான்விஜய் ஆகியோர் உடன் தேஜு அஸ்வினி, அதுல்யா சந்திரா, ஸ்வேதா டோரத்தி, ராதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர்.

வித்தியாசமான திரைக்கதையில், மாறுபட்ட அனுபவம் தரும் இப்படத்தை, இயக்குநர்கள் P.வாசு, தங்கர் பச்சான் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சகோ. கணேசன் இயக்குகிறார். மேலும் இந்த படத்திற்கு கோடியில் ஒருவன், குரங்கு பொம்மை படப்புகழ் ஒளிப்பதிவாளர் NS. உதயகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

அசுரன், விடுதலை படங்களில் பணியாற்றிய V.ராமர் இப்படத்தின் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். நாய் சேகர், விலங்கு உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்திருக்கும் சூப்பர் சிங்கர் புகழ் அஜீஸ் இப்படத்திற்கு இசை அமைக்கிறார். யானை, சினம் படங்களின் கலை இயக்குநர் மைக்கேல் இப்படத்திற்கு கலை இயக்கம் செய்கிறார். இப்டத்தை Trending entertainment & White horse studios நிறுவனங்கள் தயாரிக்கின்றனர். இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி, சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: chandramukhi 2: சந்திரமுகி 2 படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது!

Last Updated : Jun 30, 2023, 3:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details