சென்னை: பிரபல தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில் கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜென்டில்மேன். இப்படத்தின் மூலம் தான் இயக்குனர் ஷங்கர் அறிமுகமானார். அர்ஜூன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிப்பாளர் குஞ்சுமோன் தற்போது தயாரித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தை கோகுல் கிருஷ்ணா என்பவர் இயக்குகிறார். அதற்கான தொடக்க விழா இன்று (ஆக.19) சென்னையில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. இப்படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற இசை அமைப்பாளர் கீரவாணி இசை அமைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் ஆஸ்கர் வென்ற இசையமைப்பாளர் கீரவாணிக்கு சிறப்பு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்கள் குஞ்சுமோன், கே.ராஜன், அபிராமி ராமநாதன், தியாகராஜன், எஸ்.ஆர் பிரபு, ரவி கொட்டாரக்காரா நடிகர்கள் சுமன், காளி வெங்கட், சென்ட்ராயன், சேத்தன், அஜய் வின்சென்ட், படவா கோபி, ஜார்ஜ் விஜய், பிரேம் குமார், முனீஸ் ராஜா, நடிகைகள் சித்தாரா, குட்டி பத்மினி, விஜி சந்திரசேகர், சத்யபிரியா, சுதா ராணி, ஸ்ரீ ரஞ்சினி, பிரியா லால், ஆர்த்தி கணேஷ் மற்றும் இயக்குனர் கோகுல் கிருஷ்ணா, தோட்டாதரணி, பாடலாசிரியர் வைரமுத்து, லைகா தமிழ் குமரன், ரெட் ஜெயன்ட் செண்பகமூர்த்தி மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேடையில் பேசிய நடிகர் சுமன், "நான் கார்கில் சமயத்தில் ராணுவத்திற்கு எனது 150 ஏக்கர் நிலத்தை கொடுத்ததற்கு பாராட்டுகிறார்கள். இதற்கு எனது மனைவிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். இன்றும் காஷ்மீரில் நிலை மோசமாக உள்ளது. அந்த இடத்தில் ஸ்டூடியோ அல்லது ஆயுர்வேதா மருத்துவம் கட்ட வாங்கினேன். அதன்பிறகு தான் நம்ம நாட்டிற்காக கொடுத்தேன். நாம் அவர்களை பற்றி யோசிக்கிறோம் என்று நினைக்கிறார்கள். அனைத்து மொழிக்காரர்களையும் முதலில் ஒன்றிணைப்பது சினிமாதான்" எனத் தெரிவித்தார்.
கவிஞர் வைரமுத்து கூறியதாவது, "நிறைய பேச வேண்டிய மேடைதான். குஞ்சுமோன் ஒரு திரைப்படம் எடுக்க எதை மூலதனமாக வைத்திருக்கிறார் என்று ஆராய்ந்தேன். அது பொன், பொருள், பணம் அல்ல இவை எல்லாம் காணாமல் போய் விடும். அவரது மூலதனம் துணிச்சல். துணிச்சல் என்ற மூலதனத்தை 33 ஆண்டுகளாக வைத்துக்கொண்டு வெற்றி நடை போட்டு வருகிறார்.