தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

காந்தாரா லெஜண்ட் சேப்டர் -1 லுக் டீசர் வெளியீடு! மிரட்டலான தோற்றத்தில் ரிஷப் ஷெட்டி…! - kantara legend chapter 1

Kantara 2 teaser: Kantara Legend: Chapter 1 : ரிஷப் ஷெட்டி இயக்கி நடிக்கும் காந்தாரா 2ஆம் பாகத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கவுள்ள நிலையில், படத்தின் லுக் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.

காந்தாரா 2 படத்தின் டீசர் வெளியீடு
காந்தாரா 2 படத்தின் டீசர் வெளியீடு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 27, 2023, 4:13 PM IST

ஹைதராபாத்: கன்னட சினிமாவில் ஹோம்பேல் பிலிம்ஸ் தயாரிப்பில் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த திரைப்படம் காந்தாரா. இத்திரைப்படம் கடந்த 2022ஆம் ஆண்டு கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி நாடு முழுவதும் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. காந்தாரா, பஞ்சுர்லி தெய்வத்தின் பின்னணி கொண்ட கதையாக உருவாக்கப்பட்டது.

16 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட காந்தாரா திரைப்படம், உலக அளவில் 400 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்தது. கேஜிஃப் படத்திற்கு பிறகு காந்தாரா திரைப்படம் கன்னட சினிமாவிற்கு ஒரு தனி அடையாளத்தை பெற்றுத் தந்தது. காந்தாரா படத்தின் கிளைமாக்ஸ் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

'கருட காமன ரிஷப வாகன' என்ற கன்னட திரைப்படம் மூலம் ரிஷப் ஷெட்டி இந்திய அளவில் அறியப்பட்டாலும், காந்தாரா படம் மூலம் ரிஷப் ஷெட்டி மிகவும் பிரபலமடைந்தார். இதனையடுத்து காந்தாரா திரைப்படம் வெளியாகி 100வது நாளில் காந்தாரா 2ஆம் பாகத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதாவது kantara legend: chapter 1 என்ற தலைப்பில் காந்தாரா படத்தின் முன்கதையாக (prequel) உருவாக உள்ளது. இதனை தொடர்ந்து காந்தாரா 2ஆம் பாகத்தின் படப்பிடிப்பு இன்று (நவ. 27) பூஜையுடன் தொடங்குகிறது. இப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 7 மொழிகளில் வெளியாக உள்ளது.

காந்தாரா 2ஆம் பாகத்தின் லுக் டீசரும் இன்று (நவ. 27) வெளியாகியுள்ளது. காந்தாரா 2ஆம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கியதை அடுத்து ரசிகர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: "நல்ல படங்களுக்கு மொழி தடையில்லை" - ரன்பீர் கபூர்!

ABOUT THE AUTHOR

...view details