தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

பிரியங்கா சோப்ரா US செல்ல கரண் ஜோகரே காரணம் - கங்கனா ரனாவத் ட்வீட் - கங்கனா ரனாவத்

பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத், பாலிவுட் கதாநாயகியான பிரியங்கா சோப்ரா குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கங்கனா ரனாவத் ட்வீட்
கங்கனா ரனாவத் ட்வீட்

By

Published : Mar 28, 2023, 5:18 PM IST

மும்பை:எப்பொழுதும் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் தன் மனதிற்கு தோன்றும் கருத்துகளை, எந்த ஒரு தயக்கமும் இன்றி அவ்வப்போது சமூக வலை தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

சமூக வலைதளங்களில் அவர் பேசும் கருத்துகள் கடும் சர்ச்சைக்குள்ளானாலும்; தொடர்ந்து அவரது கருத்துகளைப் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இவர் பிரபல பாலிவுட் கதாநாயகியான பிரியங்கா சோப்ராவை குறித்து அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது பெரும் சர்ச்சைக்குள்ளானது. தன் டிவிட்டர் பக்கத்தில் அவர், ''பிரியங்கா சோப்ரா திரையுலகில் இருந்து வெளியேறி அமெரிக்க நாட்டிற்கு குடிபெயற கரண் ஜோகரே காரணம்'' என்று பதிவிட்டிருந்தது பாலிவுட் திரையுலகில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

மேலும் அவர், ''ஷாருக்கானுடனான நட்பினால் பிரியங்கா சோப்ரா, கரண் ஜோகரால் துண்புறுத்தப்பட்டுள்ளதாகவும், பலர் கூட்டு சேர்ந்து அவரை பாலிவுட் திரையுலகிலிருந்து வெளியேற்றியதாகவும், இப்படியான பொறாமை மற்றும் வஞ்சகம் நிறைந்தவர்களையும் திரையுலக சமூகத்தை சீர்கெடுக்கும் ஆட்களுக்கும் கடும் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்'' என்று தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதையும் படிங்க:"எனது நடிப்பில் ரஜினி சாயல் வருவது இயல்பு தான்" - நடிகர் சிவகார்த்திகேயன்!

ABOUT THE AUTHOR

...view details