சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படமாக வலம்வரும் ‘விக்ரம்’ திரைப்படத்தைத் தனக்கு தந்தமைக்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜிற்கு கமல்ஹாசன் கார் ஒன்றைப் பரிசளித்துள்ளார்.
’லெக்சஸ்’ எனும் ஜப்பானிய ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனத்தின் 'Lexus ES 300 h' எனும் ஆடம்பர கார் ரகமான இந்தக் காரின் விலை ரூ.65.60 லட்சமாம். பல்வேறு வசதிகளைக் கொண்ட இந்தக் கார், பல்வேறு வண்ணங்களில் கிடைக்கும். அதில் லோகேஷுக்கு கறுப்பு வண்ணக் காரை கமல்ஹாசன் பரிசளித்துள்ளார்.