நடிகர் கமல்ஹாசன் நடித்து வருகிற ஜூன் 3 அன்று வெளியாகவிருக்கும் ‘விக்ரம்’ திரைப்படத்திற்கான புரொமோஷன் வேலைகளில் இறங்கியுள்ளார், நடிகர் கமல். அதன் ஒரு பகுதியாக இன்று (மே 25) இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
பாடலில் இடம்பெற்று சர்ச்சையான ’ஒன்றியம்’ வார்த்தை குறித்து விளக்கமளித்த கமல்! - ஒன்றியம் குறித்து கமல்
இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் நடிகர் கமல்ஹாசன் நடித்து அடுத்து வெளிவரவிருக்கும் ‘விக்ரம்’ படம் குறித்தான செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது.
பாடலில் இடம்பெற்று சர்ச்சையான ’ஒன்றியம்’ வார்த்தை குறித்து விளக்கமளித்த கமல்
அப்போது நிருபர் ஒருவர் “பத்தல பத்தல “ பாடலில் இடம்பெற்ற ’ஒன்றியம்’ என்கிற வார்த்தை சர்ச்சையானதை குறித்து கேள்வியெழுப்பியதற்கு, “தமிழில் வார்த்தைகளுக்கு பல அர்த்தங்கள் உண்டு. சினிமாவிலும் பல ஒன்றிய அமைப்புகள் உண்டு. அதில் தவறு ஏற்பட்டால் மொத்த சினிமாவும் கெட்டுவிடும். அந்தப்பாடல் வரிகளுக்கு அர்த்தத்தை அப்படியும் எடுத்துக்கொள்ளலாம்” எனப் பதிலளித்தார்.
இதையும் படிங்க: ’கலைஞரிடம் என் படத்தின் கதையை சொன்னேன்..!’ - கமல்ஹாசன்