தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ROLEX-ற்கே ROLEX வாட்சை பரிசளித்த 'விக்ரம்'கமல்ஹாசன்! - KAMAL HAASAN

‘விக்ரம்’ படத்தின் வெற்றியை அடுத்து நடிகர் சூர்யாவிற்கு ROLEX வாட்சினை பரிசளித்தார்.

ROLEX ற்கே ROLEX வாட்சை பரிசளித்த விக்ரம்
ROLEX ற்கே ROLEX வாட்சை பரிசளித்த விக்ரம்

By

Published : Jun 8, 2022, 3:38 PM IST

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்று, உலகம் முழுவதும் வசூலைக் குவித்து வருகிறது.

இந்நிலையில் படத்தின் வெற்றியை அடுத்து நேற்று (ஜூன் 7) நடிகரும் ‘விக்ரம்’ படத்தின் தயாரிப்பாளருமான கமல்ஹாசன் இயக்குநர் லோகேஷிற்கு காரும் அவருடன் படத்தில் பணியாற்றிய 13 உதவி இயக்குநர்களுக்கு பைக்கினையும் பரிசாக அளித்தார். இதனைத்தொடர்ந்து இன்று (ஜூன் 8) படத்தில் சிறிது நேரமே வந்து திரையரங்குகளை அதிரவிட்ட நடிகர் சூர்யாவிற்கு கமல்ஹாசன் ROLEX வாட்சை பரிசாக அளித்துள்ளார்.

இதுகுறித்து சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், 'இப்படி ஒரு தருணம் வாழ்க்கையை அழகாக்குகிறது! உங்கள் ரோலக்ஸுக்கு நன்றி அண்ணா' எனக் கூறி கமல் மற்றும் லோகேஷ் உடனான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:'விக்ரம்' திரைப்படத்தால் மீண்டும் வைரலாகும் 'சக்கு... சக்கு... வத்திக்குச்சி....' பாடல்!

ABOUT THE AUTHOR

...view details