சென்னை: தமிழ் திரையுலகில் சிறந்த விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு வழங்கப்படும் 'கலைஞர் கலைத்துறை வித்தகர்' விருது குறித்து தமிழ்நாடு அரசு இன்று (மே 29) அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாடு அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது, ஜுன் 3ஆம் தேதி அன்று வழங்கப்படும் எனவும் அவ்விருதாளருக்கு நினைவுப்பரிசுடன் 10 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கலைஞர் கலைத்துறை வித்தகர் விருதை இந்தாண்டு ஜுன் 3ஆம் தேதி முதல் ஒவ்வொரு ஆண்டும் வழங்க ஏதுவாக, தகுதியான விருதாளரை தேர்வு செய்யும் வகையில் தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் தலைவராக இயக்குநர் எஸ்.பி. முத்துராமன், உறுப்பினர்களாக நடிகரும் நடிகர் சங்க தலைருமான நாசர், நடிகரும் இயக்குநருமான கரு. பழனியப்பன் ஆகியோர் பல்வேறு பரீசிலனைக்கு பிறகு நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.