தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

letterboxd இணையதள தரவரிசை பட்டியல் - இரண்டாம் இடம் பிடித்த ’கடைசி விவசாயி’ திரைப்படம் - RRR

உலக திரைப்படங்களை தரவரிசைப்படுத்தும் இணையதளமான letterboxd நிறுவனம் வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் ’கடைசி விவசாயி’ திரைப்டம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

உலக அளவில் இரண்டாம் இடம் பிடித்த ’கடைசி விவசாயி’ திரைப்படம்
உலக அளவில் இரண்டாம் இடம் பிடித்த ’கடைசி விவசாயி’ திரைப்படம்

By

Published : Jul 5, 2022, 4:45 PM IST

உலக திரைப்படங்களை தரவரிசைபடுத்தும் இணையதளமான letterboxd நிறுவனம் உலக அளவில் இந்த ஆண்டின் முதல் பகுதியில் வெளியான திரைப்படங்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் தமிழில் மணிகண்டன் இயக்கிய ”கடைசி விவசாயி” இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இதனைத்தொடர்ந்து, தெலுங்கில் வெளியான ’RRR’ திரைப்படம் ஆறாவது இடத்தையையும், தமிழில் நடிகர் கமலின் ’விக்ரம்’ திரைப்படம் 11-வது இடத்தையும் மற்றும் மலையாள திரப்படமான ’படா’21-வது பிடித்துள்ளன.

இந்த தரவரிசையின் முதலிடத்தை சீன மொழியில் வெளியாகி பலதரப்பிலிருந்தும் பாராட்டுக்களை பெற்ற 'Everything everywhere all at once' என்னும் திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது.

இதையும் படிங்க:”ராக்கெட்ரி” படத்தை பார்த்துவிட்டு மாதவனை பாராட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்

ABOUT THE AUTHOR

...view details