தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

கல்யாணி ப்ரியதர்ஷன் ஆக்‌ஷன் கதாபாத்திரத்தில் கலக்கும் ’ஆண்டனி’ டிரெய்லர் வெளியீடு! - ஆண்டனி டிரெய்லர்

ஜோஜு ஜார்ஜ், கல்யாணி பிரியதர்ஷன், செம்பன் வினோத் ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ’ஆண்டனி’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 27, 2023, 7:15 PM IST

சென்னை: பொரிஞ்சு மரியம் ஜோஸ் படத்தின் கூட்டணி மீண்டும் இரண்டாவது முறையாக இணைந்து உருவாக்கி உள்ள திரைப்படம் 'ஆண்டனி'. இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. 'ஆண்டனி' படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தை ஐன்ஸ்டின் சாக் பால் தயாரிக்க, ஐன்ஸ்டின் மீடியா, நெக்ஸ்டல் ஸ்டுடியோ மற்றும் அல்ட்ரா மீடியா என்டர்டெயின்மென்ட்ஸ் ஆகியவற்றின் கீழ் சுஷில்குமார் அகர்வால், ரஜத் அகர்வால், நிதின் குமார், கோகுல் வர்மா மற்றும் கிருஷ்ணராஜ் ராஜன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். ராஜேஷ் வர்மா இந்த படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். 'ஆண்டனி' படம் மனிதர்களின் உணர்ச்சிகளை ஒருங்கிணைத்து, குடும்பப் பிணைப்புகளைத் தாண்டி ஒரு அழுத்தமான கதையை சொல்கிறது.

ஜோஜு ஜார்ஜ், கல்யாணி பிரியதர்ஷன், செம்பன் வினோத் ஜோஸ், நைலா உஷா உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ள 'ஆண்டனி' படத்தை ஐன்ஸ்டின் மீடியா, நெக்ஸ்டல் ஸ்டுடியோ மற்றும் அல்ட்ரா மீடியா என்டர்டெயின்மென்ட்ஸ் ஆகியவற்றின் கீழ் மலையாளம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இவர்களை தவிர 'ஆண்டனி' திரைப்படத்தில் விஜயராகவன், ஆஷா சரத், ஜினு ஜோசப், ஹரிபிரசாந்த், அப்பானி சரத், பினு பப்பு, சுதிர் கரமனா, ஜூவல் மேரி உள்ளிட்ட அனுபவமிக்க நடிகர்கள் நடித்துள்ளனர். கல்யாணி பிரியதர்ஷன் இதுவரை நடிக்காத ஆக்‌ஷன் கலந்த வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு ரெனதிவ்வின் ஒளிப்பதிவு செய்ய, ஜேக்ஸ் பிஜோயின் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். திலீப் நாத்தின் கலை இயக்கத்தை மேற்கொள்ள, பிரவீன் வர்மா ஆடை வடிவமைப்பாளராகவும், தீபக் பரமேஸ்வரன் தயாரிப்பு நிர்வாகத்தை மேற்கொள்கிறார். வரும் டிசம்பர் 1ஆம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதையும் படிங்க: கோலிவுட்டில் இந்த வாரம் வரிசைகட்டும் திரைப்படங்கள்… என்னென்ன தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details