ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

வெளியானது ‘புலிமடா’ படத்தின் டைட்டில் போஸ்டர்.. ரசிகர்கள் கொண்டாட்டம்! - ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள புலிமடா

மலையாள இயக்குநர் ஏ.கே.சாஜன் இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ‘புலிமடா’ திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Etv Bharat Pulimada Movie title poster
Etv Bharat Pulimada
author img

By

Published : Aug 6, 2023, 3:57 PM IST

ஏ.கே.சாஜன் இயக்கத்தில் நடிகர் ஜோஜு ஜார்ஜ் நடித்துள்ள திரைப்படம் புலிமடா. இந்த படத்தில் தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக இருக்கு ஐஸ்வர்யா ராஜேஸ் கதாநாயகியாக நடிக்கிறார். மலையாளத்தில் உருவாகியுள்ள இந்த படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. புலிமடா படத்திற்கான டைட்டில் போஸ்டர் "பெண் வாசனை" என்ற டேக் லைனுடன் தற்போது வெளியாகியுள்ளது. ஜோஜு ஜார்ஜ் நடித்த ‘இரட்டா’ படத்தின் இரண்டாம் பாகம் தான் இந்த புலிமடா. புலிமடா படத்தை ஐன்ஸ்டீன் சாக் பால், ராஜேஷ் தாமோதரன் ஆகியோர் லான்ட் சினிமாஸ் மற்றும் ஐன்ஸ்டீன் மீடியா ஆகியவற்றின் கீழ் தயாரித்துள்ளனர்.

இந்த படத்தை இயக்குநர் ஏகே சஜன் இயக்கியுள்ளார். மேலும், கதை, திரைக்கதை, வசனம், படத்தொகுப்பு ஆகியவற்றையும் ஏகே சஜன் கையாள்கிறார். மேலும், இந்த படத்தில் வேணு ஐ.எஸ்.சி ஒளிப்பதிவு செய்துள்ளார். இஷான் தேவ் இசையமைக்க, பின்னணி இசை அனில் ஜான்சன் செய்துள்ளார்.

மலையாளத்தில் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்த இந்த காம்போவை மலையாள ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் இணைந்துள்ள இவர்களது பிரமாண்டமான படத்தை காண ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் மற்றும் செம்பன் வினோத், லிஜோ மோல், ஜாபர் இடுக்கி, ஜியோ பேபி, பாலச்சந்திர மேனன், ஜானி ஆண்டனி, கிருஷ்ண பிரபா, சோனா நாயர் உள்ளிட்ட பல மலையாள நடிகர்கள் புலிமடா படத்தில் நடித்துள்ளனர்.

தயாரிப்பு வடிவமைப்பாளராக வினீஷ் பங்களா, கலை இயக்குநர் ஜித்து செபாஸ்டியன், ஒப்பனை ஷாஜி புல்பள்ளி, நிர்வாகத் தயாரிப்பாளராக ஷிஜோ ஜோசப், புரொடக்‌ஷன் கன்ட்ரோலராக ராஜீவ் பெரும்பாவூர், ஷமீர் ஷ்யாம், காஸ்ட்யூம் ரஹ்மான், காஸ்ட்யூம், ஸ்டூம் , ஒலி வடிவமைப்பு மற்றும் கலவை - சினோய் ஜோசப், பாடல் வரிகள் - ரஃபிக் அகமது உள்ளிட்ட பலர் இந்த படத்தில் பணியாற்றியுள்ளனர்.

இதையும் படிங்க:Jailer Pre-Booking: விறுவிறுப்பான முன்பதிவில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர்!

ABOUT THE AUTHOR

...view details