தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

Jigarthanda Double X.. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் டீசர் வெளியீடு! - today news

Jigarthanda Double X: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர் எஸ்.ஜே சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி உள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் டீசர் வெளியிடப்பட்டு உள்ளது.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் டீசர் வெளியீடு
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் டீசர் வெளியீடு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 11, 2023, 1:52 PM IST

ஹைதராபாத்:இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர் எஸ்.ஜே சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி உள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர் சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா ஆகியோர் நடிப்பில் ஜிகர்தண்டா படம் வெளியானது.

மதுரையை கதைக் களமாக உருவான இப்படம் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியானது. மேலும் இந்தப் படத்திற்காக நடிகர் பாபி சிம்ஹா 2014 ஆம் ஆண்டின் தேசிய விருதினையும் பெற்றார். இதனை அடுத்து 8 வருடங்களுக்குப் பிறகு, ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகமான, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

இந்தப் படத்தில் நடிகர் எஸ்.ஜே சூர்யா, நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் நிமிஷா சஜயன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளனர். கார்த்திக்கேயன் சந்தானத்தின் தயாரிப்பில் உருவான இப்படம், இந்த வருடம் தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:“என் வாழ்க்கை கோலத்தை தொடங்கி வைத்தவர் இவர்தான்” - விஜய் சேதுபதி குறிப்பிட்ட பிரபலம் யார்?

விரைவாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்து இருந்த நிலையில் டீசர் இன்று (செப். 11) வெளியிடப்பட்டு உள்ளது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது. நடிகர் தனுஷ், தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, மலையாள நடிகர் துல்கர் சல்மான் மற்றும் ரக்‌ஷித் ஷெட்டி ஆகியோரால் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நேற்று (செப். 10) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தின் போஸ்டரை பகிர்ந்து இருந்தார். மேலும் அதில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் டீசர், செப்டம்பர் 11ஆம் தேதி 12:12 மணியளவில் வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இதையும் படிங்க:ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் குளறுபடி.. வாய் திறக்காத ஏ.ஆர்.ரகுமான்..! நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு கூறுவது என்ன?

ABOUT THE AUTHOR

...view details