தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

jujubee: ஜெயிலர் படத்தின் 3வது சிங்கிள் இன்று மாலை வெளியாகிறது! - jailer update

ரஜினியின் நடிப்பில் வெளியாகவுள்ள ஜெயிலர் (jailer) திரைப்படத்தின் 3வது பாடல் இன்று வெளியாகயுள்ளது என படக்குழு சார்பில் அறிவிக்கப்ப்ட்டுள்ளது.

jujubee
ஜூஜூபி

By

Published : Jul 26, 2023, 11:50 AM IST

சென்னை: தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர் (jailer). இப்படத்தை நெல்சன் இயக்கி உள்ளார். மேலும் இப்படத்தில், மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ் குமார், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப், தெலுங்கு நடிகர் சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

மேலும், இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது, இப்படம். சமீபத்தில் வெளியான அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பிறகு ரஜினி நடித்துள்ள படம் என்பதாலும், நெல்சனின் இயக்கத்தில் கடைசியாக வெளியான பீஸ்ட் படத்தின் தோல்வியாலும், ரஜினி - நெல்சன் கூட்டணி மிகப்பெரிய வெற்றியைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

மேலும், நெல்சனுக்கும் இப்படம் மிகப் பெரிய பலப்பரீட்சை என்றுதான் சொல்ல வேண்டும். பீஸ்ட் படத்தின் தோல்வியால் துவண்டு போய் உள்ள நெல்சனுக்கு கட்டாய வெற்றி தேவைப்படுகிறது. இப்படத்தில் இருந்து ‘காவாலா’ மற்றும் ‘ஹுக்கூம்’ ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிகம் கவர்ந்து வருகிறது. இந்த பாடல்கள் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை கடந்துள்ளது மட்டுமின்றி மொழி கடந்தும் ரசிக்கப்பட்டு வருகிறது.

மேலும் சூப்பர் ஸ்டார் பட்டம்‌ குறித்து பல்வேறு கருத்துக்கள் பரவி வரும் நிலையில், அனைவருக்கும் ஹுக்கூம் பாடல் மூலம் பதிலடி கொடுத்துள்ளார் ரஜினிகாந்த். இந்த நிலையில் வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ள ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 28ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்டமான முறையில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், இப்படத்தில் இருந்து அடுத்த பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இன்று (ஜூலை 26) இப்படத்தில் இருந்து ‘ஜூஜூபி’ என்ற பாடல் வெளியாக உள்ளது. இப்படாலை சூப்பர் சுப்பு எழுதியுள்ளார். தீ பாடியுள்ளார். ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், தற்போது மூன்றாவது பாடல் மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.

இதையும் படிங்க: 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் கவுண்டமணி!

ABOUT THE AUTHOR

...view details