சென்னை: இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் 2001ஆம் ஆண்டு வெளியான திரைப்படம், இந்தியன். இப்படம் வெளியானபோதே மிகப்பெரிய வெற்றியை பெற்றது மட்டுமல்லாமல், அரசியல் ரீதியான பல்வேறு சர்ச்சைகளையும் சந்தித்தது. மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.
இதனிடையே இந்தியன் 2 படத்தின் வேலைகள் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. அப்போது கரோனா கட்டுப்பாடுகள் மற்றும் கமல்ஹாசனின் அரசியல் மற்றும் திரைப்பட கமிட்மெண்ட்களால் இந்தியன் 2 படத்தின் வேலைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
பின்னர் மீண்டும் புத்துயிர் பெற்ற படப்பிடிப்பு, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்சமயம் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. இதில் கமல்ஹாசன் மற்றும் காஜல் அகர்வாலின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ், இந்தியன் 2 படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.
இதனை, தனக்கு மேக்கப் செய்யும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு யோக்ராஜ் உறுதிபடுத்தி உள்ளார். மேலும் யோக்ராஜின் கதாபாத்திரம், கமலின் சேனாதிபதி கதாபாத்திரத்திற்கு டூப்பாக இருக்கக்கூடும் என ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:இந்தியன் பனோராமாவில் “கிடா” திரைப்படம் தேர்வு