தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

நான் ஒரு சூப் பாய், என்னை கல்லூரியில் இருந்தே யாரும் காதலித்தது கிடையாது - நடிகர் விக்ரம் - jayam ravi

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் விளம்பர நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் நான் ஒரிஜினல் சூப்(பர்) பாய், கல்லூரியில் இருந்தே தன்னை யாரும் காதலித்தது கிடையாது எனக் கூறினார்

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 17, 2023, 3:06 PM IST

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மாலில் பொன்னியின் செல்வன் திரைப்பட இரண்டாம் பாகத்தின் விளம்பர நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி மற்றும் நடிகைகள் த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மேடையில் நடிகர் விக்ரம், அருள் படத்தின் பாடலைப்பாடி, ரசிகர்கள் மத்தியில் பேச்சை துவக்கினார். பின்னர் “தான் பேச நினைத்ததை எல்லாம் த்ரிஷா பேசிவிட்டார். ரசிகர்களே I LOVE YOU, நாங்கள் அனைவரும் உங்களை காதலிக்கிறோம். நான் ஒவ்வொரு படத்திற்கும் உடல் வாகை மாற்றிக் கொண்டே இருப்பேன்.

மஜா திரைப்பட சூட்டிங் பொள்ளாச்சியில் நடைபெற்றபோது சாப்பிட்ட கோயம்பத்தூர் ஸ்பெஷல் சாப்பாடு இன்று வரை தனது உடம்பில் உள்ளது. கோயம்பத்தூர் மக்கள் அழகாக தமிழ் பேசுகிறீர்கள். ’அந்நியன்’ திரைப்படத்தில் வரும் குரலில் பேசினதை நினைத்தாலே சிரிப்பு தான் வருகிறது” எனத் தெரிவித்தார்.

மேலும், ”பொன்னியின் செல்வன் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இது எங்கள் படம் என்பதைத் தாண்டி, இது உங்கள் படம் என ஏற்றுக்கொண்டீர்கள். இரண்டாம் பாகம் வெளியான பிறகு கோவையில் படம் ஓடிய அளவு வேறு எங்கும் ஓடவில்லை என்ற சாதனைப் படைக்க வேண்டும். இந்த படத்தின்போது தன்னுடன் நடித்த சக நடிகர்களுடன் அனைத்தையும் சந்தோஷமாகப் பகிர்ந்து கொண்டோம். இந்தப் படம் ப்ரோமோஷனுக்காக செலவழித்த நேரம் அதிகம். அனைத்து நடிகர்களும் இதில் ஒன்றாக இணைந்து நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது” என்றார்.

அப்போது ரசிகர்கள் தங்கலான் திரைப்படம் குறித்து அப்டேட் கேட்க முழக்கங்களை எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த விக்ரம், ”அந்த திரைப்பட ப்ரோமோஷனின்போது, அதனைப் பற்றி பேசி கொள்ளலாம். நானும் தங்கலான் சூட்டிங்கில் இருந்து தான் வந்துள்ளேன். இயக்குநர் ரஞ்சித் உங்களிடம் ஹாய் சொல்ல சொன்னார்” எனக் கூறினார்.

''ஆதித்யா வர்மாவில் காதல் தோல்வியால் பாருக்கு போனான், இவன் காதல் தோல்வியால் வாருக்கு போனான், நான் ஒரிஜினல் சூப்(பர்) பாய், கல்லூரியில் இருந்தே தன்னை யாரும் காதலித்தது கிடையாது'' எனத் தெரிவித்தார், விக்ரம்.

இந்த விழாவில் பேசிய நடிகர் ஜெயம் ரவி, இந்நிகழ்வில் பேசிய நடிகர் ஜெயம் ரவி, ”எப்போது கோயம்புத்தூர் வந்தாலும் அன்பும் பாசமும் கிடைத்துக்கொண்டே இருக்கிறது. கடைசியாக மிருதன் பட சூட்டிங்கிற்காக கோவை வந்தபோது, சூட்டிங் ஸ்பாட்டில் மக்கள் தன்னைப் பார்க்க திரண்டு வந்ததால் திகைத்துப் போனேன். தனக்கு கோவை இரண்டாவது வீடு என மனதாரச்சொல்கிறேன். மக்கள், ரசிகர்கள், எப்போதும் அன்பாக நடந்து கொள்கின்றனர்.

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகிறது. முதல் பாகத்திற்கு உற்சாக வரவேற்பு அளித்ததைப்போல் இரண்டாம் பாகத்திற்கும் கொடுப்பீர்கள் என நம்புகிறோம். நிறைய நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது PS1 எந்த படத்துடன் ஒப்பிட்டு பார்க்கிறீர்கள் என கேட்பார்கள், தான் PS2 உடன் ஒப்பிட்டுப் பாருங்கள் எனத் தெரிவிப்பேன்.

இந்தப் படம் மிகவும் கஷ்டப்பட்டு உருவாக்கப்பட்டது. இயக்குநர் மணிரத்னம் நாயகன் படத்தின் இரண்டாம் பாகம் எடுத்தால் அதில் நான் நடிக்க வேண்டும். நடிகர் கார்த்தி எப்போதும் மன உறுதியுடன் இருப்பார். மேலும் த்ரிஷா அசால்ட்டாக இருப்பதோடு எல்லோரையும் மயக்கி விட்டு போய்க்கொண்டே இருப்பார். தனக்கு சினிமா குரு எப்போதும் அப்பா தான். என் அப்பா நான் சின்ன தவறுகள் செய்தாலும் அதை கவனித்து சரி செய்வார்’’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Ponniyin Selvan 2: த்ரிஷாவுடன் ரொமான்ஸ்.. கார்த்தி மனைவி கூறியது என்ன?

ABOUT THE AUTHOR

...view details