தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

‘எம்பியாக நியமிக்கப்பட்டதற்கு மோடிக்கு நன்றி’ - அமெரிக்காவிலிருந்து  இளையராஜா ட்வீட் - ilayaraja tweet from america

மாநிலங்களவை எம்பியாக நியமிக்கப்பட்டதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து அமெரிக்காவிலிருந்து இளையராஜா ட்வீட் செய்துள்ளார்

அமெரிக்காவிலிருந்து நன்றி தெரிவித்த இளையராஜா!!
அமெரிக்காவிலிருந்து நன்றி தெரிவித்த இளையராஜா!!

By

Published : Jul 7, 2022, 9:31 AM IST

Updated : Jul 7, 2022, 9:58 AM IST

மாநிலங்களவை எம்பியாக இசையமைப்பாளர் இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பல அரசியல் தலைவர்களும் திரை நட்சத்திரங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றானர். இந்நிலையில் இந்திய அரசுக்கும் மற்றும் தனது அபிமானிகளுக்கும் நன்றி தெரிவித்து அமெரிக்காவிலிருந்து இளையராஜா ட்வீட் செய்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “பிரதமர் மோடிக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இசை, கலை, மற்றும் கலாச்சாரத்தின் அழகை நம் சமூகத்தில் விரிவுப்படுத்த இது ஒரு பெரிய வாய்ப்பாக அமையும்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘எனக்களித்த கௌரவ அங்கிகாரத்திற்காக அனைவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல இயலாமையால் எல்லோருக்கும் எனது உளங்கனிந்த நன்றி’ என தனது அபிமானிகளுக்கு ட்வீட் செய்துள்ளார்.

இதையும் படிங்க: 'இளையராஜாவுக்கு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம்' - கமல்ஹாசன் ட்வீட்

Last Updated : Jul 7, 2022, 9:58 AM IST

ABOUT THE AUTHOR

...view details