NOISE AND GRAINS நிறுவனம் அண்மையில் 'ராக் வித் ராஜா' எனும் பெயரில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை நடத்தியது. இதைத் தொடர்ந்து, "இசையென்றால் இளையராஜா " எனும் இசை நிகழ்ச்சியை நடத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் ஜூன் 26ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதுரை வேலம்மாள் குளோபல் கேம்பஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த நிறுவனம் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் "நெஞ்சே எழு", பிரபல பின்னணி பாடகர் சித் ஸ்ரீராமின் "ALL LOVE NO HATE", பின்னணி பாடகர் ஹரிஹரன் "மடை திறந்து", மறைந்த பின்னணி பாடகர் எஸ்பிபியின் "VOICE OF லெஜெண்ட்" இசையமைப்பாளர் அனிருத்தின் "LIVE IN SINGAPORE " உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளது.