தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

"சிறந்த சினிமாக்கள் மூலம் உங்களை தொடர்ந்து என்டர்டெய்ன் செய்வேன்" - கமல்ஹாசன் - கமல்

‘விக்ரம்’ திரைப்படத்தை வெற்றியடைய செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகர் கமல் ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

’சிறந்த சினிமாக்கள் மூலம் உங்களை தொடர்ந்து என்டர்டெய்ன்மென்ட் செய்வேன்..! ‘- கமல்ஹாசன்!
’சிறந்த சினிமாக்கள் மூலம் உங்களை தொடர்ந்து என்டர்டெய்ன்மென்ட் செய்வேன்..! ‘- கமல்ஹாசன்!

By

Published : Jun 11, 2022, 5:53 PM IST

சென்னை: நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ’விக்ரம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பல்வேறு நாடுகளில் பெரும் வசூலை ஈட்டிவருகிறது. இது கமலின் திரைப் பயணத்தில் மிகப்பெரிய வசூல் ஈட்டிய படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த வெற்றிக்காக கமல், இயக்குநர் லோகேஷ் கனகராஜிற்கு லெக்சஸ் உயர் ரக கார் ஒன்றை பரிசளித்தார். அதுமட்டுமின்றி ‘விக்ரம்’ திரைப்படத்தில் பணியாற்றிய உதவி இயக்குநர்களுக்கு பைக் பரிசளித்தார். அதோடு படத்தில் சிறப்பு தோற்றமளித்த சூர்யாவிற்கு ‘ரோலெக்ஸ்’ வாட்ச்சை பரிசாகத் தந்தார்.

இந்த நிலையில், இப்படியொரு வெற்றியைத் தனக்களித்த தமிழ் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வீடியோ ஒன்றை ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இண்டெர்னேஷ்னலின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், ”தமிழர்கள் இல்லாத நாடில்லை, ஊரில்லை எனும் அளவுக்கு உலகெங்கும் பரந்து விரிந்திருக்கும் தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். திரையிடப்பட்ட நாடுகளிலெல்லாம் ’விக்ரம்’ திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறது.

இந்த பிரம்மாண்டமான வெற்றியை எனக்களித்த என் தொப்புள்கொடி உறவுகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். சிறந்த சினிமாக்கள் மூலம் உங்களைத் தொடர்ந்து ’Entertain’ செய்வது தான் நான் உங்களுக்கு காட்டும் பதில் நன்றியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதை நான் தொடர்ந்து செய்வேன்” எனப் பேசியுள்ளார்.

இதையும் படிங்க: Watch Video: சூட்டிங் இடைவேளையிலும் கடும் உடற்பயிற்சியில் சூரி..!

ABOUT THE AUTHOR

...view details