சென்னை: வினோத் இயக்கத்தில் நடிகர் சார்லி மற்றும் சென்ட்றாயன் ஆகியோர் நடித்துள்ள ஃபைண்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் தனியார் திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் சார்லி பேசிய போது, ”41 ஆண்டுகளுக்கு முன்பு மிக அதிகமான வேலை காரணமாக நேரமில்லாத கவிஞராக இருந்தவர் வைரமுத்து. நான் என் நண்பர்கள் எழுதிய ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட அவரை அழைத்தேன். அவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் அவர் எங்களுக்காகக் கலந்து கொள்ள ஒத்துக்கொண்டு வந்து கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். கிட்டத்தட்ட இந்த படத்திற்கு ஒரு நாளைக்கு 18 மணி நேரத்திற்கும் மேலாகத் தூங்காமல் கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறோம்” எனக் கூறினார்.
கவிஞர் வைரமுத்து பேசிய போது, “என் வீட்டிற்கு எந்த புதியவர்கள் வந்தாலும் நான் அவர்களைப் பேச விட்டு வேடிக்கை பார்ப்பேன். காரணம் எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கும் என்று அல்ல, எந்த விதையில் எந்த விருட்சம் இருக்கும் என்று. தமிழ் சினிமாவில் பார்க்க முடியாத இனம், தயாரிப்பாளர் இனம், சினிமாவில் வணங்கக் கூடிய ஒருவர் தயாரிப்பாளர்.