தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

’கலைஞரிடம் என் படத்தின் கதையை சொன்னேன்..!’ - கமல்ஹாசன் - கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்து வெளிவரவிருக்கும் ‘விக்ரம்’ திரைப்படம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

’கலைஞரிடம் என் படத்தின் கதையை சொன்னேன்..!’ - கமல்ஹாசன்
’கலைஞரிடம் என் படத்தின் கதையை சொன்னேன்..!’ - கமல்ஹாசன்

By

Published : May 25, 2022, 10:38 PM IST

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வருகிற ஜூன் 3 அன்று வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்த இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சில நாட்களுக்கு முன்பு பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் புரொமோஷன் வேலைகளில் சுழன்று இயங்கி வருகிறார், கமல். அதில் ஒரு பகுதியாக இன்று(மே 25) இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் சென்னையிலுள்ள ஒரு தனியார் ஹோட்டலில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது ஒரு நிருபர் “ கலைஞரின் பிறந்தநாளான ஜூன் 3 அன்று உங்கள் படத்தை வெளியிட ஏதேனும் காரணம் உண்டா..?” எனக் கேட்ட கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், “கலைஞரின் பிறந்த நாளன்று வெளியிட குறிப்பிட்ட காரணம் எதுவுமில்லை.

என் திறமைகளை வளர்த்துக்கொள்ள முன்னோடிகளில் கலைஞர் அய்யா முக்கியமானவர். என்னிடம் மிக ஆவலாக கதை கேட்பார். அப்படி ஒரு முறை அவரிடம் என்னுடைய ’தசாவதாரம்’ படத்தின் கதையைச் சொன்னேன். அதற்கு நிறைய பாராட்டி சில திருத்தங்களும் சொன்னார்.

மேலும், “ஏன் படம் வெளிவர இவ்வளவு இடைவெளி விடுகிறாய்..?” என்று கேட்பார். அதற்கு, “எழுத நேரம் எடுக்கிறது. யாரும் நல்ல எழுத்தாளர்களாக இல்லை. அதனால், நானே எழுதவேண்டியுள்ளது..!” என்றேன்.

அதற்கு அவர், “திரைப்படத்திற்கு எழுதுவது ஒரு தனிக்கலை. அதை எல்லோரும் எழுதிவிட முடியாது என்றார். அவர் சொன்ன அந்தப்பாடத்தை என்றும் நான் நினைவுகூர்வேன்” எனப் பேசினார்.

இதையும் படிங்க: 'விக்ரம்' புரொமோஷனுக்காக சுற்றிச்சுழலும் கமல்!

ABOUT THE AUTHOR

...view details