தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

அஜீத் சாருடன் நடிக்க ‘மரண வெயிட்டிங்’....நடிகை நஸ்ரியா பேட்டி!! - actor ajith

’அடடே சுந்தரா’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை தி நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இந்த சந்திப்பில் அஜித் சாருடன் நடிக்க எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் நடிக்க தயாராக தான் உள்ளேன் என்று நடிகை நஸ்ரியா கூறினார்.

அஜீத் சாருடன் நடிக்க ‘ஐ எம் வெயிட்டிங்’
அஜீத் சாருடன் நடிக்க ‘ஐ எம் வெயிட்டிங்’

By

Published : Jun 4, 2022, 8:45 AM IST

சென்னை: ’நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில், இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அன்டே சுந்தரனக்கி’. இந்தப் படத்தின் மூலம் நடிகை நஸ்ரியா நசீம் தெலுங்கில் நாயகியாக அறிமுகமாகிறார். இத்திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் தமிழில் ’அடடே சுந்தரா’ என்ற பெயரில் வருகின்ற ஜூன் 10ஆம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை தி நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் நானி, நஸ்ரியா மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். ’அடடே சுந்தரா’ திரைப்படத்தின் நாயகன் நானி பேசுகையில், ஷியாம் சிங்கராய் படத்திற்கு பிறகு இந்த படம் வெளியாக உள்ளது. ’அடடே சுந்தரா’ திரைப்படம் சிறப்பாக வந்துள்ளது.

கரோனாவுக்குப் பிறகு நிறைய படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகிறது. அதனால் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் செய்ய போதுமான நேரம் கிடைப்பதில்லை. அதனால் இறுதி வரை படத்தின் தயாரிப்பு பணிகள் நடப்பதால் கடினமாக உள்ளது என்று பேசினார்.

அஜீத் சாருடன் நடிக்க ‘ஐ எம் வெயிட்டிங்
இத்திரைப்படத்தின் நாயகி நஸ்ரியா பேசுகையில், இங்கு வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதனை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. இந்த படத்தை உருவாக்கியபோது எங்களுக்கு இருந்த மகிழ்ச்சியை நீங்கள் படம் பார்க்கும்போது பெறுவீர்கள் என நம்புகிறேன்.

நான் திட்டமிட்டு எந்த படத்திலும் நடிப்பதில்லை. கதை எனக்கு பிடித்தால் அந்த படத்தில் நடிப்பேன், அதனால் தான் மீண்டும் தமிழில் நடிக்க நீண்ட காலம் ஆனது. அஜித் சாருடன் நடிக்க எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் நான் நடிக்க தயாராக தான் உள்ளேன்.காதல் திருமணம் பற்றி நாயகி நஸ்ரியாவிடம் கேட்டபோது, காதலுக்காக கடைசி வரை போராட வேண்டும் என்று கூறினார்.

இதையும் படிங்க: வெளியானது 'அட்லி' இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் புதிய படத்தின் பெயர்!

ABOUT THE AUTHOR

...view details