தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ஹன்சிகாவின் "லவ் ஷாதி டிராமா" பர்ஸ்ட் லுக் வெளியீடு - hansika marriage photos

இந்திய சினிமாவில் பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானியின் திருமண நிகழ்வு டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியின் பர்ஸ்ட் லுக்கை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ளது

ஹாட்ஸ்டாரில் வெளியானது ஹன்சிகாவின் திருமண பர்ஸ்ட் லுக் போஸ்டர்
ஹாட்ஸ்டாரில் வெளியானது ஹன்சிகாவின் திருமண பர்ஸ்ட் லுக் போஸ்டர்

By

Published : Jan 19, 2023, 1:29 PM IST

பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி, கடந்தாண்டு டிசம்பர் 4 ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில், தனது நீண்ட கால காதலரான சோஹேல் கதுரியாவை திருமணம் செய்துகொண்டார். பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமணம் நாடு‌முழுவதும் பேசப்பட்டது. ஹன்சிகாவின் திருமணத்தை ஹாட்ஸ்டாரில் ஸ்பெஷல் ஷோ-வாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டது.

'ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா என்னும் பெயரில் திருமண வாழ்க்கையை தொடர போவதற்கான முடிவை எடுத்த தருணத்தில் இருந்து, ஆறு வாரங்களில் எப்படி திருமணத்தை குடும்பமாக சேர்ந்து எப்படி நடத்தினார்கள் என்பது வரை ஷேவாக வெளியிடப்பட உள்ளது. அதில் திருமணத்தின் ஆடை வடிவமைப்பாளர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர், குடும்ப உறுப்பினர்கள் கூறும் அனுபவங்களும் இடம்பெற உள்ளது.

அதோடு, ஹன்சிகாவும் அவரது குடும்பத்தினரும் ஹன்சிகாவின் திருமணத்தை சுற்றி நடந்த அசௌகரியமான பிரச்சனையை பற்றியும் கூறுகிறார்கள். இது அவரது கனவு நாளை தடம் புரள செய்யும் அளவிற்கு எவ்வாறு அச்சுறுத்தியது என்றும் விளக்குகிறார்கள். இந்த ஷோவின் வெளியீட்டு தேதி மிக விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் "லவ் ஷாதி டிராமா" வின் பர்ஸ்ட் லுக் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தொலைகாட்சித் தொடர் இயக்க விருப்பம் - ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்

ABOUT THE AUTHOR

...view details