வாலு, ஸ்கெட்ச், சங்கத்தமிழன் ஆகிய படங்களை இயக்கிய விஜய் சந்தர் தற்போது ஹன்சிகா முதன்மைப்பாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தை 'கூகுள் குட்டப்பா' படத்தை இயக்கிய சரவணன் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி ஒரே கட்டமாக நடந்து வந்தது.
ஹன்சிகாவின் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு! - hansika shooting
'கூகுள் குட்டப்பா' படத்தின் இயக்குநர் சரவணன் இயக்கத்தில் ஹன்சிகா நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாகப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
ஹன்சிகாவின் புதிய படம் படப்பிடிப்பு நிறைவு!
தற்போது இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் அடுத்த கட்ட அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:முற்றற்ற கவிதைகளாய் அவள் பாவனைகள் : சாய் பல்லவி புகைப்படத் தொகுப்பு!