தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் கவுண்டமணி! - goundamani comedy

நடிகர் கவுண்டமணி மீண்டும் கதையின் நாயகனாக 'ஒத்த ஓட்டு முத்தையா' என்ற முழு நீள நகைச்சுவை படத்தில் நடிக்கிறார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 25, 2023, 3:16 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் கேலி, கிண்டல் நகைச்சுவையால் பலரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர் நடிகர் கவுண்டமணி. இப்போதும் இவரது வசனங்கள் சமூக வலைதளங்களில் மீம்ஸ்களாக வலம் வருகின்றன. அந்த அளவுக்கு இவரது காமெடி நம் எல்லோரது அன்றாட வாழ்க்கையிலும் கலந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் 'எனக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை' என்ற படத்தில் நடித்திருந்தார்.

தற்போது 'பழனிச்சாமி வாத்தியார்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். ஷஷி பிலிம்ஸ் தயாரிப்பில் கோவை லட்சுமி ராஜன் மேற்பார்வையில் சாய் ராஜகோபால் இயக்குகிறார். 'காமெடி கிங்' கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்கும் முழு நீள நகைச்சுவை படத்துக்கு 'ஒத்த ஓட்டு முத்தையா' என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த குடும்பத்துடன் கண்டு ரசிக்கக்கூடிய வகையில் உருவாகவுள்ள இப்படத்தில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, மாரிமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, முத்துக்காளை, 'எதிர்நீச்சல்' ஜான்சி ராணி, தாரணி, கூல் சுரேஷ், சென்றாயன், லேகா ஶ்ரீ, டி கே ஶ்ரீநிவாசன், சதீஷ் உள்ளிட்டப் பெரும் நட்சத்திரப் பட்டாளம் களம் இறங்குகிறது.

மேலும், நடிகர் சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக், மறைந்த நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ், மற்றும் நடிகர் மயில்சாமி மகன் அன்பு மயில்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, இவர்களுக்கு ஜோடியாக மூன்று இளம் நடிகைகள் நடிக்க உள்ளனர். கவுண்டமணிக்கு ஜோடியாக ராஜேஸ்வரி நடிக்கிறார்.

படம் குறித்துப் பேசிய இயக்குநர் சாய் ராஜகோபால், "சுமார் 70 படங்களில் கவுண்டமணி மற்றும் செந்திலுக்கான நகைச்சுவை பகுதியை எழுதியதோடு, பல்வேறு படங்களில் உதவி, துணை மற்றும் இணை இயக்குநராக நான் பணியாற்றி உள்ளேன். எனது 25 ஆண்டு கால திரையுலகப் பயணத்தில், பாண்டியராஜன், ஈஸ்வரி ராவ் நடிப்பில் 'சுந்தரி நீயும் சுந்தரன் நானும்', 'பாய்ஸ்' மணிகண்டன் மற்றும் சிம்ரன் நடிப்பில் 'கிச்சா வயசு 16' ஆகிய படங்களை இயக்கி உள்ளேன்.

'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் கதையை கவுண்டமணியிடம் சொன்னபோது மிகவும் மகிழ்ச்சி தெரிவித்ததோடு நடிப்பதற்கும் உடனே சம்மதம் தெரிவித்தார். ஆறு முதல் 60 வரை அனைத்து வயதினரும் ரசிக்கக்கூடிய அரசியல் கலந்த முழு நீள நகைச்சுவை திரைப்படமாக இது இருக்கும். இப்படத்தை ரசிகர்கள் கண்டு மகிழ்ந்து தங்களது பேராதரவை தெரிவிப்பார்கள் என்று நம்புகிறேன்," என்று கூறினார்.

'ஒத்த ஓட்டு முத்தையா' திரைப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார். ஹெக்டர் ஸ்ரீதர் ஒளிப்பதிவை கையாள்கிறார். கலை இயக்கத்திற்கு மகேஷ் நம்பியும், படத்தொகுப்புக்கு ராஜா சேதுபதியும் பொறுப்பேற்றுள்ளனர்.

இதையும் படிங்க: ஓய்வுக்காக வெளிநாடு பறந்த நடிகர் விஜய் - சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ!

ABOUT THE AUTHOR

...view details