தமிழில் நடிகை நயன்தாரா, யோகி பாபு, சரண்யா ஆகியோர் நடிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா திரைப்படம் பெரும் வெற்றியடைந்தது. இதனை தொடர்ந்து இப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
நடிகை ஸ்ரீதேவியின் மகளும் பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர் நடித்துள்ள இப்படத்திற்கு ”குட் லக் ஜெர்ரி” என பெயரிடப்பட்டுள்ளது. ஆனந்த் எல் ராய் மற்றும் லைகா தயாரிப்பில் சித்தார்த் சென்குப்தா இயக்கியுள்ள இத்திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.