இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் தொடரில் தமிழ்ப்பாடலான ’டியா,டியா டோலே’ பாடலுக்கு மூன்று பெண்கள் நடனமாடினர். பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த உஷா என்பவர் அதனைப் பதிவிட்டார். இந்த பெண்களின் வீடியோவை இசையமைப்பாளர் யுவன், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். இப்படி நம் தமிழ்ப்பாடலை காமன்வெல்த் போட்டியில் ஒலிக்கச் செய்த இந்த பெண்கள் யார்?,
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பிரான்ஸில் வாழும் 'உஷா ஜெ', என்பவர் தான் இந்த வீடியோவை ”காமன்வெல்த் விளையாட்டுப்போன்ற ஒரு பெரிய போட்டியில் நமது கலாசாரத்தை பிரதிநிதித்துவப்படுத்த முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி”, எனும் தலைப்புடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
அவர் தான் அந்தப் பாடலுக்கு நடன இயக்குநரும் ஆவார். மேலும் அவருடன் அந்த வீடியோவில் மிதுஜா மற்றும் ஜானுஷா ஆகியோர் ஆடியுள்ளனர். தொழில்முறை நடனக்கலைஞரான உஷா பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு நடன இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார். ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் தொடங்கிய ’ஹைப்ரிட் பரதநாட்டியம்’ வீடியோ மூலம் பெரிதளவில் பிரபலம் அடைந்தார்.