தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

“மிரள்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு - Miral

பரத், வாணி போஜன் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் நடித்துள்ள “மிரள்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டரில் வெளியிட்டார்.

“மிரள்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
“மிரள்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

By

Published : Jun 1, 2022, 10:40 PM IST

சென்னை: Axess Film Factory G டில்லி பாபு தயாரிப்பில், M சக்திவேல் இயக்கத்தில் பரத்-வாணி போஜன் நடித்துள்ள “மிரள்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார்.

தமிழ் சினிமாவில் நல்ல தரமான உள்ளடக்கம் சார்ந்த திரைப்படங்களைத் தயாரிக்கும் மிகச்சிலரில் ஒருவர் Axess Film Factory தயாரிப்பாளர் G டில்லி பாபு. அவரது தயாரிப்பில் வெளியான ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சிலர் என பல திரைப்படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றதோடு, பாக்ஸ் ஆபிஸ் வெற்றிப் படங்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.

தற்போது தன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக ‘மிரள்’ என்ற பெயரில் அடுத்த திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். ஸ்லாஷர் த்ரில்லர் வகையைச் சேர்ந்த இப்படம் பார்வையாளர்கள் தமிழ்த்திரையில் இதுவரை கண்டிராத திரில்லர் அனுபவத்தை வழங்கும் அளவிற்கு உருவாகியுள்ளதாம்.

இப்படத்தில் பரத், வாணி போஜன் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மற்ற நடிகர்கள் மீர் கிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி, அர்ஜை, நரேன் பாலாஜி, மாஸ்டர் அங்கித், மாஸ்டர் சாந்தனு மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இதையும் படிங்க:கமலின் மலேசிய நிகழ்ச்சியில் ரசிகர்கள் அவமதிப்பு - மன்னிப்புகேட்ட விழா ஏற்பாட்டு நிறுவனம்!

ABOUT THE AUTHOR

...view details