தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

தொழில்நுட்ப த்ரில்லராக உருவாகியுள்ள ’பிங்கர் டிப்’ சீசன் 2 நாளை வெளியாகிறது!! - OTT

தொழில்நுட்ப த்ரில்லராக உருவாகியுள்ள ’பிங்கர் டிப்’ சீசன் 2 ஜீ5 ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.

தொழில்நுட்ப த்ரில்லராக உருவாகியுள்ள ’பிங்கர் டிப்’ சீசன் 2 நாளை வெளியாகிறது!!
தொழில்நுட்ப த்ரில்லராக உருவாகியுள்ள ’பிங்கர் டிப்’ சீசன் 2 நாளை வெளியாகிறது!!

By

Published : Jun 16, 2022, 10:25 AM IST

ஜீ5 ஓடிடி தளத்தில் உலகம் முழுவதும் பிரீமியர் செய்யவுள்ள அடுத்த படைப்பான ‘ஃபிங்கர்டிப் சீசன் 2 (fingertip season 2) தொடரின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

ஜீ5 தளம் தொடர்ந்து, வெற்றிகரமான தொடர்களான விலங்கு, அனந்தம், கார்மேகம் என பல வெற்றி படைப்புகள் மூலம் பார்வையாளர்களை மகிழ்வித்து வருகிறது. இந்நிலையில் தனது அடுத்த அதிரடி ஒரிஜினல் தொடரான ‘ஃபிங்கர்டிப் சீசன் 2’ வை தற்போது அறிவித்துள்ளது. இந்த தொடரை அருண் குமார் மற்றும் ஜார்ஜ் C வில்லியம்ஸ் தயாரித்துள்ளனர். சிவாகர் இயக்கியுள்ளார். இந்தத் தொடரில் பிரசன்னா, ரெஜினா கசாண்ட்ரா மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர். நாளை (ஜூன்17) ‘ஃபிங்கர்டிப்’ சீசன் 2 வெளியாவதை ஒட்டி இந்தத் தொடரின் நடிகர்கள் மற்றும் குழுவினர், பத்திரிகையாளர்களை நண்பர்களை சந்தித்தனர்.

இயக்குனர் சிவாகர் ஶ்ரீனிவாசன் கூறியாதாவது, கரோனா தடங்கல்களை கடந்து இந்த தொடரை நாங்கள் முடித்துள்ளோம். அதற்கு நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தான் காரணம். படத்தில் நடித்த முக்கிய நடிகர்கள் அவர்களது கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்கி நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஜீ5 சார்பில் வந்த பல பரிந்துரைகள் இந்த தொடரை செதுக்கியது. இந்த தொடரில் கதாபாத்திரங்களின் வசனமும், காட்சிகளும் சிறப்பாக அமைய காரணம் எழுத்தாளர் ரோஹித். இந்த தொடர் ஒரு தொழில்நுட்ப திரில்லர், உங்களுக்கு இந்த தொடர் பிடிக்கும் என நம்புகிறேன், உங்கள் ஆதரவு தேவை. நன்றி.

நடிகர் பிரசன்னா கூறியதாவது, ஃபிங்கர் டிப் முதல் சீசன், மிகவும் ஆழமாகவும், ஈர்க்கும் வகையில் இருந்தது. அந்த தொடரின் இயக்குனர் என்னை அணுகி, இந்த கதையை சொன்ன போது எனக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக தெரிந்தது. அனைவராலும் மொபைல் இல்லாமல் இருக்க முடியாத சூழ்நிலையில் நாம் வாழ்கிறோம். இன்றைக்கு தொழில்நுட்பம் நம்மை எவ்வளவு தூரம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது, இதில் என்ன ஆபத்து இருக்கிறது என்பதை சொல்வது தான் இந்த தொடர். இந்த தொடர் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.

நடிகை ரெஜினா கசாண்ட்ரா கூறியதாவது, இந்த கதை நாம் தினமும் கடந்து செல்லும் விஷயத்தை திரையில் பார்ப்பது போல் இருக்கும். ஒரு விஷயத்தை எல்லோருடைய பார்வையில் பார்ப்பது போல் இருக்கும். இந்த சீரியலில் நான் நடிகையாகவே நடித்துள்ளேன். நடிகைக்கு இருக்கும் சிக்கல்களை காட்டும் கதாபாத்திரமாக இருக்கும். பல சிக்கல்களை கடந்து இந்த தொடரை நாங்கள் எடுத்துள்ளோம். நான் 15 வருடங்கள் கழித்து பிரசன்னா உடன் நடித்துள்ளேன். அவருடன் நடித்தது மகிழ்ச்சி.

நடிகை அபர்ணா பாலமுரளி கூறியதாவது, ஃபிங்கர் டிப் தொடருக்கு என்னை அழைத்த போது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இது போன்ற கதைக்களத்தை எடுப்பதற்கே ஒரு தைரியம் வேண்டும். பல நிஜ சம்பவங்களை திரையில் பார்ப்பது போல் இந்த தொடர் இருக்கும். இது எனது முதல் வலைதொடர். இயக்குநர் இந்த கதையை சிறப்பாக சொல்லியுள்ளார், இந்த தொடரை பார்த்து உங்கள் ஆதரவை எங்களுக்கு தாருங்கள். ‘ஃபிங்கர்டிப் சீசன் 2' தொடர் ஜீ5 ஒடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.

இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் அஜித்; வைரலாகும் வீடியோ!

ABOUT THE AUTHOR

...view details