தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

சுசீந்திரனின் 'வள்ளி மயில்’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது! - சுசீந்திரனின் வள்ளி மயில் படப்பிடிப்பு இன்று தொடங்கியது

விஜய் ஆண்டனி, சத்யராஜ், பாரதிராஜா இணைந்து நடிக்கும் ‘வள்ளி மயில்’ படத்தை சுசீந்திரன் இயக்க, திண்டுக்கல்லில் இன்று அப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது.

சுசீந்திரனின் 'வள்ளி மயில்’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது!
சுசீந்திரனின் 'வள்ளி மயில்’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது!

By

Published : May 16, 2022, 5:57 PM IST

நல்லுசாமி பிக்சர்ஸ் தாய் சரவணன் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, சத்யராஜ், பாரதிராஜா இணைந்து நடிக்கும் ‘வள்ளி மயில்’ படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஆரம்பமானது. படப்பிடிப்பைத் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல்லில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கூத்தம்பூண்டி ஊரிலுள்ள சிவன் கோயிலில் ஆரம்பமான இதன் படப்பிடிப்பு திண்டுக்கல்லைச் சுற்றி தொடர்ந்து 30 நாள்கள் நடைபெறுகிறது. முதல் நாள் படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி, தெலுங்கு சூப்பர் ஹிட் ‘ஜதி ரத்னலு’ திரைப்படத்தில் நடித்த ஃபரியா அப்துல்லா ஆகியோர் பங்கேற்றார்கள்.

தொடர்ந்து, சத்யராஜ், பாரதிராஜா, மற்றும் ‘புஷ்பா’ புகழ் சுனில், தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, சிங்கம் புலி, அறந்தாங்கி நிஷா மற்றும் பலர் கலந்துகொள்கிறார்கள். 1980 கால கட்டங்களில் நடக்கும் கதையாக பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டு, மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் இப்படம் வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

இதையடுத்து, கொடைக்கானல், தேனி, காரைக்குடி, கோபிசெட்டிபாளையம், பழநி ஆகியப் பகுதிகளில் நடைபெற இருக்கிறது. இந்தப் படத்திற்கு டி.இமான் இசையமைக்க உள்ளார்.

இதையும் படிங்க:'கமலை வைத்து மதுரையில் ஒரு சம்பவம் செய்ய ஆசை..!' - பா.இரஞ்சித்

ABOUT THE AUTHOR

...view details