தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

செல்வராகவன் நடிக்கும் பகாசூரன் படப்பிடிப்பு நிறைவு! - Bhagasooran

மோகன்.G இயக்கத்தில் செல்வராகவன், நட்டி இணைந்து நடிக்கும் பகாசூரன் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.

செல்வராகவன் நடிக்கும் பகாசூரன் படப்பிடிப்பு நிறைவு!
செல்வராகவன் நடிக்கும் பகாசூரன் படப்பிடிப்பு நிறைவு!

By

Published : Jul 20, 2022, 11:13 AM IST

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் மோகன்.G அவர் அடுத்ததாக ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் இயக்கும் படத்திற்கு "பகாசூரன்" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கிறார். நட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ராதாரவி, K.ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி, சசி லையா ஆகியோர் நடித்துள்ளனர். கதாநாயகியாக தாராக்ஷி நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தமக்கென தனியிடத்தை தக்க வைத்து பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துவரும் சாம் C.S. இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

செல்வராகவன் நடிக்கும் பகாசூரன் படப்பிடிப்பு நிறைவு!

இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 18ஆம் தேதி பூஜையுடன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. ஜூலை 18ஆம் தேதியோடு முழு படப்பிடிப்பும் முடிவடைந்தது. படத்தின் காட்சிகள் வெகு சிறப்பாக வந்துள்ளதாகவும், இதுவரை யாரும் பயணிக்காத கதைக்களத்தில் கதை இருக்கும் என்றும், இந்த படம் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இயக்குனர் மோகன் தெரிவித்துள்ளார். இப்படத்தை செப்டம்பர் மாதத்தில் திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: வளர்த்த கடா மார்பில் பாய்கிறது - தனுஷ், செல்வராகவன் இடையே சண்டை?

ABOUT THE AUTHOR

...view details