சென்னை:பாலிவுடன் நடிகர்ஷாஹித் கபூர் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்படும் ராஜ் & டிகேயின், ஃபார்ஸி கிரைம் த்ரில்லர் வெப் தொடர், பிப்ரவரி 10 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. இதில், கே.கே. மேனன், ராஷி கண்ணா, அமோல் பலேகர், ரெஜினா காசண்ட்ரா மற்றும் புவன் அரோரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் பிப்ரவரி 10ஆம் தேதி இந்தியா உள்பட 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது.
விஜய் சேதுபதி, ஷாகித் கபூர் நடித்துள்ள ஃபார்ஸி ரிலீஸ் தேதி அறிவிப்பு - ஃபார்ஸி வெப் தொடர்
ஷாஹித் கபூர் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ஃபார்ஸி வெப் தொடர், பிப்ரவரி 10 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது.
மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த தி ஃபேமிலி மேன் வெப் தொடரை உருவாக்கிய மிகப்பிரசித்திபெற்ற படைப்பாளிகளின் அடுத்த உருவாக்கம்தான் ஃபார்ஸி வெப் தொடர். ராஜ் & டிகேயின் தயாரிப்பு நிறுவனமான D2R ஃபிலிம்ஸின் கீழ் தயாரிக்கப்பட்ட இந்த நட்சத்திரக்கூட்டம் நிறைந்த வெப் தொடர். பாலிவுட்டின் மனம் கவர்ந்த ஷாஹித் கபூர் மற்றும் கோலிவுட்டின் மிகவும் அன்புக்குரிய நட்சத்திரமான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
இதையும் படிங்க: HBD ARR: இன்றும் என்றும் இசைப்புயலின் டாப் லிஸ்ட் பாடல்கள்