அருண் விஜய் நடிப்பில், அறிவழகன் இயக்கியுள்ள 'தமிழ் ராக்கர்ஸ்' இணையத்தொடர் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வருகிற 19ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் அருண் விஜய், இயக்குநர் அறிவழகன், வாணி போஜன், அழகம்பெருமாள், ஐஸ்வர்யா மேனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்பொழுது, பேசிய இயக்குநர் அறிவழகன், “இக்கதையை இயக்க என்னிடம் கேட்டபோது சில விஷயங்களுக்காக இதனை எடுக்க ஒப்புக்கொண்டேன். தமிழ் ராக்கர்ஸ் இந்த சினிமா தொழிலை அழித்து வருகிறது. இதனை எதிர்த்துப் பல்வேறு போராட்டங்கள் நடந்துள்ளன. இந்த முழுத்தொடரையும் பார்த்து முடிக்கும்போது ரசிகர்களின் மனநிலை மாறும். ஏவிஎம் நிறுவனம் எவ்வளவு பெரிய நிறுவனம் இந்நிறுவனத்தில் பணியாற்றுவது பெருமையான தருணம்” என்றார்.
பின்னர் பேசிய தயாரிப்பாளர் அருணா (ஏவிஎம்), ”இது ஏவிஎம் நிறுவனத்தின் கம்பேக் என்று பேசுகிறார்கள். என்னிடம் கேட்டால் அதை நான் ஒப்புக்கொள்ளமாட்டேன். சாதாரணமாக படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் டவுன்லோட் செய்து பார்ப்பவர்களுக்கு, இதனை யார் அப்லோட் செய்கிறார்கள் என்று தெரியாது. கலைஞர்களின் கடின உழைப்பை எப்படி திருடுகிறார்கள் என்று இப்படத்தில் காணலாம்”, என்றார்.
தொடர்ந்து பேசிய நடிகர் அருண் விஜய்,
'தமிழ் ராக்கர்ஸ்' செய்தியாளர் சந்திப்பு ”சினிமாவுக்கும் ஓடிடிக்கும் வித்தியாசம் தெரியவில்லை. இக்கதையை இரண்டரை மணி நேரத்தில் சொல்ல முடியாது. இக்கதையை மக்களிடம் சொல்ல வேண்டும் என்ற சோனி லைவ் மற்றும் ஏவிஏம்மின் முயற்சிக்கு நன்றி. நிறைய பேரின் உழைப்பு. ஒரு படத்தை எடுக்கும்போது எவ்வளவு வலி இருக்கும் என்பதை ரசிகர்கள் இப்படத்தை பார்த்துவிட்டு உணர்வார்கள்”, எனத்தெரிவித்தார்.
இதையும் படிங்க:சந்தோஷ் நாராயணன் இன்றி வெளியான பா.ரஞ்சித்தின் முதல் பாடல்!