தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

யோகி பாபுவின் செயலால் ரசிகர்கள் நெகிழ்ச்சி! - yogi

தன் புகைப்படத்தை வைத்து தயவுசெய்து படங்களுக்கு விளம்பரம் செய்யாதீர்கள் என நடிகர் யோகி பாபு தெரிவித்துள்ளார்.

யோகி பாபுவின் செயலால் ரசிகர்கள் நெகிழ்ச்சி!
யோகி பாபுவின் செயலால் ரசிகர்கள் நெகிழ்ச்சி!

By

Published : Jul 14, 2022, 8:55 PM IST

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அதில் தாதா என்ற படத்தின் போஸ்டரில் யோகி பாபு துப்பாக்கியை பிடித்துக்கொண்டு இருப்பது போன்று ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு இருந்தது.

இதனை பகிர்ந்த யோகி பாபு இப்படத்தின் ஹீரோ நண்பர் நிதின் சத்யா தான். நான் இப்படத்தில் சில காட்சிகள் மட்டுமே நடித்துள்ளேன், தயவுசெய்து இதைப் போன்று விளம்பரம் செய்யாதீர்கள், என்று பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

மேலும் நிதின் சத்யா, யோகி பாபுவின் பதிவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். யோகிபாபுவின் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:'தமிழ்நாட்டில் தமிழ்மொழி பேச்சுமொழியாக மாறும் நிலைமை வரக்கூடும்' - வைரமுத்து எச்சரிக்கை

ABOUT THE AUTHOR

...view details