விஜய் நடிப்பில் தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கிய ’வாரிசு’ திரைப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படத்துடன் வெளியான இத்திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து தற்போது விஜய், மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனராஜுடன் மீண்டும் இணைந்து பணிபுரிந்து வருகிறார். தற்போது வரை பெயரிடப்படாத இந்த திரைப்படம் ‘தளபதி 67’ என அழைக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முன்னதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ பெரும் வெற்றி பெற்றது. அது மட்டுமின்றி இந்த LCU எனும் லோகேஷின் புதிய சினிமாட்டிக் யூனிவர்ஸும் இதன் மூலம் உருவானது எனவே கூறலாம். இதனால் ரசிகர்கள் அனைவரும் தற்போது விஜய் நடித்து வரும் தளபதி 67 திரைப்படமும் இதன் கீழ் வருமா எனத் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதிலளிக்கும் வகையிலும், ரசிகர்களை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தும் படியான ஒரு புதிய அப்டேட்டையும் மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற படத்தின் பிரமோஷன் விழாவில் கலந்துகொண்ட ஃபகத் ஃபாசில் இதுகுறித்து பேசியுள்ளார். அவர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.