தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'பதான்' திரைப்பட டிரெய்லரில் மிளிர்ந்த துபாய் புர்ஜ் கலிஃபா! - jawaan

துபாய் புர்ஜ் கலிஃபாவில் நடைபெற்ற பதான் திரைப்பட டிரெய்லர் ஒளிபரப்பு நிகழ்ச்சியில் நடிகர் ஷாருக்கான் பங்கேற்றார்.

பதான் திரைப்பட டிரெய்லரில் மிளிர்ந்த துபாய் ’புர்ஜ் கலிஃபா
பதான் திரைப்பட டிரெய்லரில் மிளிர்ந்த துபாய் ’புர்ஜ் கலிஃபா

By

Published : Jan 15, 2023, 3:41 PM IST

ஹைதராபாத்: ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆப்ரஹாம் ஆகியோர் நடித்து ஜனவரி 25ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் 'பதான்'. துபாய் புர்ஜ் கலிஃபாவில் நடைபெற்ற பதான் டிரெய்லர் ஒளிபரப்பு நிகழ்ச்சியில் நடிகர் ஷாருக்கான் பங்கேற்றார். படத்தின் தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் நிகழ்ச்சியின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளது.

ஒரு புகைப்படத்தில் ஷாருக்கான் தனது சிக்னேச்சர் போஸில் புர்ஜ் கலிஃபா முன்பு நின்று போஸ் கொடுத்தார். மேலும் ஐக்கிய அரபு எமிரெட்ஸில் நடைபெற்ற இன்டர்நேஷனல் லீக் டி20 போட்டியைக் கண்டுகளித்தார்.

'பதான்' திரைப்படத்தின் சர்வதேச விநியோகஸ்தர் பேசுகையில், 'பதான் படத்திற்கு அனைவரது மத்தியிலும் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. புகழ்பெற்ற புர்ஜ் கலிஃபாவில் பதான் பட டிரெய்லர் ஒளிபரப்புவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். ஐக்கிய அரபு எமிரெட்ஸில் ஷாருக்கானுக்கு பெருமளவு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ரசிகர்கள் காட்டும் அன்பிற்கு மிகவும் நன்றி' எனக் கூறினார்.

சமீபத்தில் சமூக வலைதளத்தில் வெளியான 'பதான்' திரைப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படத்தைத் தவிர ஷாருக்கான் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் 'டங்கி' படத்திலும், அட்லி இயக்கத்தில் 'ஜவான்' படத்திலும் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: திரையரங்கில் பாதியிலேயே நிறுத்தப்பட்ட துணிவு படம்.. ரசிகர்கள் வாக்குவாதம்..

ABOUT THE AUTHOR

...view details